அல்சூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்சூர் ஏரி
Halasuru Lake
அல்சூர் ஏரி
அமைவிடம்பெங்களூர், கருநாடகம்
ஆள்கூறுகள்12°58′53.3″N 77°37′9.17″E / 12.981472°N 77.6192139°E / 12.981472; 77.6192139
வகைதேங்கும் நீர்
முதன்மை வரத்துமழையும் நகர வடிகாலும்
வடிநிலப் பரப்பு1.5 km2 (0.6 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு50 ha (123.6 ஏக்கர்கள்)
சராசரி ஆழம்19 அடி (5.8 m)
அதிகபட்ச ஆழம்58 அடி (18 m)
கரை நீளம்13 km (1.9 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்931 m (3,054.5 அடி)
Islandsபல தீவுகள்
குடியேற்றங்கள்பெங்களூர்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.
அல்சூரு ஏரி

அல்சூர் ஏரி (Ulsoor Lake) இந்தியாவின் கருநாடக மாநிலத்திலுள்ள பெங்களூர் நகரில் இருக்கும் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இதை அலசுரு ஏரி என்றும் அழைக்கிறார்கள். பெங்களூர் நகரின் கிழக்குப் பகுதியில் அல்சூர் ஏரி அமைந்துள்ளது.. ஏரி அமைந்துள்ள அல்சூர் என்ற வட்டாரத்தின் பெயரிலிருந்து அதன் பெயர் வருவிக்கப்பட்டுள்ளது. எம்.கி சாலைக்கு அருகில் இவ்வட்டாரம் இடம்பெற்றுள்ளது. 123.6 ஏக்கர் அளவுக்கு மேல் பரவியுள்ள ஏரியானது பல தீவுகளைக் கொண்டுள்ளது .. கெம்பேகவுதாவின் காலத்திற்குரிய ஏரி என்றாலும், தற்போதைய ஏரியை அப்போதைய பெங்களூரு ஆணையாளர் சர் லெவின் பெந்தம் போரிங் உருவாக்கியுள்ளார்[1][2]. அல்சூர் ஏரி பல்வேறு வகையான மாசு அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது[2][3][4].

அல்சூர் ஏரியை ஒட்டி நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பூங்காவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.[5]

தண்ணீரின் தரம்[தொகு]

ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியம் காரணமாக ஆறு முக்கியமான கண்காணிப்பு புள்ளிகளை மையமாக்கி ஏரி கண்காணிக்கப்படுகிறது. ஒளி, வெப்பநிலை, ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஏரியில் வளரும் நீர்வாழ் தாவரங்களின் வகை உள்ளிட்டவை இக்கண்காணிப்பு புள்ளிகளில் அடங்கும். நீர்ப்பிடிப்பு பரப்பளவு 1.5 சதுர கிலோமீட்டர் கொண்டுள்ளது என ஏரியைப் பற்றிய ஆய்வுகளில் தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். ஏரிக்கான தண்ணீர் வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் மூன்று வடிகால்கள் மூலம் வருகிறது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மெட்ராசு பொறியாளர் குழு மையத்திற்கு அருகிலிருந்து முதல் வடிகால் வருகிறது. இரண்டாவது வடிகால் சீவனகள்ளியிலிருந்தும், மூன்றாவது வடிகால் தோட்டிகுண்டாவிலிருந்து கட்டாரியம்மா தோட்டம், கோதண்டப்பா தோட்டம், முனிவேங்கட்டப்பா தோட்டம், முத்தம்மா தோட்டம், முனியம்மா தோட்டம், கெம்புராயானா தோட்டம் மற்றும் நியூ கார்ப்பரேசன் காலனி ஆகிய பகுதிகளை கடந்தும் வருகிறது. இந்த பகுதிகள் அனைத்தும் ஏரியிலிருந்து ஒரு கிலோமீட்டர் எல்லைக்குள் உள்ளன. இப்பகுதிகளில் குடிசைவாசிகள் வசிக்கின்றனர்[6]. பகல்நேரத்தில் ஏரி நீரில் கரைந்துள்ள ஆக்சிசனின் அளவு லிட்டருக்கு 0.2 முதல் 4.5 மில்லிகிராம் வரை மாறுபட்டு மிக அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. ஏரி நீரின் இறந்து அழுகும் தன்மை ஒன்றுக்கு குறைவாக இருக்கிறது என்பதை உற்பத்தி / சுவாச விகித ஆய்வு உறுதி செய்துள்ளது. பாசுபேட்டு, நைட்ரசன் மற்றும் குளோரோபில் அளவு அதிகமாக இருப்பதைக் குறிக்கும் மேலதிக ஆய்வுகள் மூலம் ஏரியின் கனிமச்சத்து அதிகரிக்கும் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏரியின் மேற்பரப்பில் இருந்து கீழே ஆழ்பகுதி வரை நச்சுத்தன்மை கொண்ட இரவில் ஆக்சிசனை பயன்படுத்தும் நீலப்பச்சை பாசி நுண்மையமாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நீர்வாழ் தாவரங்கள் மற்றும் மீன்களை பாதித்தது. தற்பொழுது ஏரியில் ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மேற்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளிலும் நீர் மாதிரியில் துத்தநாகத்தின் உள்ளடக்கம் அதிக செறிவுடன் கலந்திருப்பதும் நிறுவப்பட்டது. ஏரியின் கசடுகளில் துத்தநாகம், ஈயம், காட்மியம், குரோமியம் ஆகிய உலோகங்களின் செறிவு மிக அதிக அளவில் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் ஏரியின் அவசரகால மறுசீரமைப்பு மற்றும் தீர்வு நடவடிக்கைகளின் அவசியத்தை உறுதிப்படுத்தின:[6]

  • ஏரியின் தூர்வாரும் பணியென்பது அதன் அசுத்தங்களை அகற்றுவதாகும்.
  • ஏரியின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பொருத்தமான வேலியிடுவதன் மூலம் நிறுத்த வேண்டும்.
  • புயல் நீரை மட்டுமே ஏரிக்குள் அனுமதிக்க வேண்டும்.
  • கால்நடைகளின் இருப்பிடம், மாட்டு சாணம், மற்றும் இராணுவ உணவு விடுதிகளின் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் இராணுவ அலகுகள் நிறுத்த வேண்டும். அங்கு ஓர் உயிர் எரிவாயு ஆலை நிறுவுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
  • நெகிழிப் பைகள் ஏரிக்குள் போடப்படுவதை தடுக்க வேண்டும்.
  • அடையாளம் காணப்பட்ட இடங்களில் கழிவுநீர் / சாக்கடை வாயில்கள் மூடப்பட வேண்டும்.
  • ஏரியை சுற்றியுள்ள குடிசைப்பகுதிகளிலிருந்து ஏரிக்கு வரும் நீரை அது ஏரியில் கலப்பதற்கு முன்பாகவே வடிகட்டி சுத்திகரிக்க வேண்டும். அல்லது இவ்வாறு வரும் நீரை காக்சு டவுன் போன்ற அருகிலுள்ள கழிவு நீர் வடிகால் பகுதிகளுடன் இணைக்க வேண்டும்.
  • பண்டிகை காலங்களில் சிலைகள் நீரில் மூழ்குவதை தடை செய்ய வேண்டும்.
  • அனைத்து குடிசைவாசிகளையும் அப்பிராந்தியத்திலிருந்து அகற்ற வேண்டும்.
  • நைட்ரசன் மற்றும் பாசுபேட் உள்ளடக்கத்தை குறைக்க மீன்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை பயிரிட்டு அறுவடை செய்ய வேண்டும்.

மறுசீரமைப்புப் பணிகள்[தொகு]

அந்தியில் பெங்களூர் அல்சூரு ஏரி

கீழே பட்டியலிடப்பட்டுள்ள மறுசீரமைப்பு பணிகள் ஏரியின் சூழலில் மேம்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன [2][3][4].

ஏரிக்குள் செல்லும் கழிவுநீரின் காற்றோட்டம்

பூங்கா மற்றும் நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டது

ஏரியை தூர் வாருதலால் ஆழம் மற்றும் ஏரியின் கொள் திறன் அதிகரித்தது.

கழிவு நீர் நுழைவாயில்களின் வாயில் வடிகட்டும் பொறிகள் நிறுவப்பட்டன.

நகரின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலத்தடி கழிவுநீர் பாதைகளை 900 நானோமீட்டர் குழாய்கள் வழியாக திசைதிருப்பி விடப்படுகின்றன.

ஏரிக்குள் இயற்கையான மீன் இனங்களை அறிமுகப்படுத்தியும், பொருத்தமான நீர் தாவரங்கள் வளரவும் தூண்டப்பட்டு நீர்வாழ் உயிரினங்கள் மீட்டெடுப்படுகின்றன.

மக்கள் குப்பைகளை ஏரிக்குள் கொட்டுவதைத் தடுக்க இணைப்பு வேலி அமைக்கப்பட்டது.

மெட்ராசு பொறியியல் குழுமத்தின் படகுப் பயிற்சி வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை விடுமுறை தவிர்த்து காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஏரிக்கு வரமுடிகிறது.

தூய்மை இயக்கத்தால் ஏரிக்கு புதிய வாழ்க்கையை கிடைத்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. B. L. Rice. Gazetteer of Mysore. பக். 71. https://books.google.com/books?id=p0wSoEIub1YC&pg=PA71&lpg=PA71&dq=Somesvara+temple+in+bangalore&source=web&ots=vc4hvyw5IZ&sig=2BhcN5TMxyIorQrEAGBKaaZxHy0&hl=en&sa=X&oi=book_result&resnum=2&ct=result#PPA72,M1. பார்த்த நாள்: 2017-02-23. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Halasuru Lake: Clogged lung space". Web.archive.org. 2009-02-02. Archived from the original on 2009-02-02. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  3. 3.0 3.1 "Ulsoor Lake restoration on schedule". The Hindu. 18 April 2003. https://www.thehindu.com/thehindu/2003/04/18/stories/2003041809580300.htm. பார்த்த நாள்: 11 November 2018. 
  4. 4.0 4.1 "3. Study Area". Wgbis.ces.iisc.ernet.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  5. "பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறக்கவைத்து மகிழ்ந்தவர் கருணாநிதி!". செய்தி. தினமணி. 9 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. 6.0 6.1 "STATUS OF ULSOOR LAKE WATER QUALITY BETWEEN 1996-97". Ces.iisc.ernet.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்சூர்_ஏரி&oldid=3576476" இலிருந்து மீள்விக்கப்பட்டது