உள்ளடக்கத்துக்குச் செல்

அல்கா சிங் அர்க்வான்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்கா சிங் அர்க்வான்சி
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2022
முன்னையவர்இராஜ் குமார் அகர்வால்
தொகுதிசண்டிலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅலகாபாத் வேளாண் நிறுவன
15 மே 1979 (1979-05-15) (அகவை 47)
இலக்னோ, உத்தரப்பிரதேசம்
இறப்புஅலகாபாத் வேளாண் நிறுவன
இளைப்பாறுமிடம்அலகாபாத் வேளாண் நிறுவன
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அணுப் சிங்
பெற்றோர்
  • அலகாபாத் வேளாண் நிறுவன
கல்விமுதுகலை வணிக மேலாண்மை
முன்னாள் மாணவர்சாம் கிக்கின்பாதம் வேளாண் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

அல்கா சிங் அர்க்வான்சி (Alka Singh Arkvanshi)(பிறப்பு 15 மே 1979) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சண்டிலா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

இலக்னோ மாவட்டத்தின் சரோஜ்னிநகரைச் சேர்ந்தவர் அர்க்வன்சி. இவர் அனூப் சிங்கை மணந்தார். 2007-ஆம் ஆண்டில் அலகாபாத் வேளாண் நிறுவனத்தில் தனது முதுநிலை மேலாண்மைக் கல்வியினை முடித்தார்.[3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு சண்டிலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து அர்கவன்சி வெற்றி பெற்றார். இவர் 101,730 வாக்குகளைப் பெற்று பகுஜன் சமாஜ் கட்சியின் அப்துல் மன்னனை 37,103 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "All 8 BJP candidates win as 7 SP MLAs vote for saffron party". 2024-02-28. https://timesofindia.indiatimes.com/city/lucknow/all-8-bjp-candidates-win-as-7-sp-mlas-vote-for-saffron-party/articleshow/108056113.cms.
  2. "Sandila Election Result 2022 LIVE Updates: Alka Singh of BJP Wins". News18 (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2024-06-18.
  3. "Alka Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- SANDILA(HARDOI) – Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-06-18.
  4. "Alka Singh from BJP Won Sandila Assembly Election Result 2022: Candidates List and Winner in Sandila Constituency". indiatoday.in (in ஆங்கிலம்). Retrieved 2024-06-18.
  5. "Sandila, Uttar Pradesh Assembly Election Results 2022 LIVE Updates: BJP retains Sandila seat, Alka Singh wins with 101377 votes". India Today (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2024-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்கா_சிங்_அர்க்வான்சி&oldid=4398212" இலிருந்து மீள்விக்கப்பட்டது