அல்கா கிரிப்லானி
அல்கா கிரிப்லானி (Alka Kriplani) ஒரு இந்திய மகளிர் மருத்துவ நிபுணர், [1] மருத்துவ எழுத்தாளர் மற்றும் கல்வியாளர், இனப்பெருக்க உட்சுரப்பியல் மற்றும் பெண்ணோயியல், உள்நோக்கியல் ஆகிய துறைகளில் அவரது பங்களிப்புகளுக்கு பெயர் பெற்றவர். [2] [3] அவர் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இந்தியா நிறுவனம், புது தில்லியின் மகளிர் நலவியல் மற்றும் மகப்பேறியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆவார் . [4] 2007 ஆம் ஆண்டில் மரு பிசி ராய் விருது பெற்றவர் [2] 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமை விருதான பத்மசிறீ .விருது பெற்றார். [5]
சுயசரிதை[தொகு]
இந்திய மாநிலமான சத்தீஸ்கரில், ஜவஹர்லால் நேரு நினைவு மருத்துவக் கல்லூரி, ராய்பூரில் அல்கா கிரிப்லானி மருத்துவத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியலில் (MD) [6] முதுகலைப் பட்டம் பெற்றார்.[7] பின்னர், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார், அங்கு பேராசிரியர் மற்றும் மகளிர் மற்றும் மகப்பேறியல் துறையின் தலைவராக உள்ளார். [7] [8] அவர் லண்டனின் ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரியின் (FRCOG) கவுரவ உறுப்பினராக உள்ளார் [6] [8] மற்றும் சிங்கப்பூர் (FAMS), அகாடமி ஆஃப் மெடிசின் (FAMS), இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரியின் (FICOG) ஆய்வுதவித் தொகையினைப் பெற்றுள்ளார். இந்திய தாய் மற்றும் குழந்தை நலக் கல்லூரி (FICMCH) மற்றும் ஆசிய-ஓசியானியாவின் நோயெதிர்ப்பு சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றிலிருந்தும் ஆய்வுதவித் தொகை பெற்றுள்ளார். [9]
டாக்டர் கிரிப்லானி 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் மருத்துவ நாளமில்லா சங்கத்தின் (GESI) தலைவராகவும், டெல்லியின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சங்கத்தின் (AOGD) முன்னாள் தலைவராகவும் , மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் மற்றும் தில்லி மகளிர் மருத்துவ உள்நோக்கியல் சமூகத்தின் துணைத் தலைவராக இருந்தார். இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார், [3][2] அவர் ஆசிய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். [2]
கிரிப்லானி ஆராய்ச்சி மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது [10] மகளிர் நலவியல் துறையியல் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள் உற்றுநோக்கு திறனாய்வு தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் வெளியான பல ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. [11] [12] [13] [14] அவர் 691 வெளியீடுகளின் ஆசிரியர் 2 புத்தகங்கள், [15] 269 மருத்துவ ஆவணங்கள், [16] [17] 271 சுருக்கங்கள் மற்றும் மற்ற ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட [18] 53 அத்தியாயங்களை வழங்கியுள்ளார். [2] அவர் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட கௌரவ சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார், [9] 79 நேரடி பட்டறைகளை நடத்தினார் [9] மற்றும் எய்ம்ஸில் உள்நோக்கியல் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறார். [2] [19]
கிரிப்லானி, தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார், [20] சிஎல் ஜாவேரி (1995), டாக்டர் நீரா அகர்வால் தங்கப் பதக்கம் (1999), கேபி தாமஸ்கர் விருது (2002), டிஎம்ஏ போன்ற பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றுள்ளார். மருத்துவ ஆசிரியர்கள் விருது (2005), ஜெகதீஸ்வரி மிஸ்ரா விருது (2006), ராஷ்ட்ரிய கவுரவ் விருது (2007), இனப்பெருக்க உட்சுரப்பியல் துறையில் டாக்டர் நிமிஷ் ஷெலட் ஆராய்ச்சி பரிசு (2010) ) மற்றும் DGF ஆண்டின் சிறந்த பெண்கள் விருது (2010). இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில் டாக்டர் பிசி ராய் விருது [8] [9] மிக உயர்ந்த இந்திய மருத்துவ விருது இதுவாகும். [2] [3] அதைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [8]
சான்றுகள்[தொகு]
- ↑ "Dr. Alka Kriplani - Obstetricians And Gynaecologists (ob/gyn)". Med India. 2015. 8 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Sehat". Sehat. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 3.2 "IJCP". IJCP. 2015. 24 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Boloji". Boloji. 2015. 25 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards". Padma Awards. 2015. 28 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 "Q Medicine". Q Medicine. 2015. 4 மார்ச் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 7.0 7.1 "Hindustan Times". Hindustan Times. 2 February 2015. 25 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ 8.0 8.1 8.2 8.3 "Edu Billa". Edu Billa. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 9.0 9.1 9.2 9.3 "Gynae-Endocrine Society of India". Gynae-Endocrine Society of India. 2015. 25 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Clinical Trials". CTRI. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Profile on Easy Bib Research". Easy Bib Research. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Profile on NCBI". NCBI. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Profile on Microsoft Academic Search". Microsoft Academic Search. 2015. 25 February 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Profile on Pub Facts". Pub Facts. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Alka Kriplani (Editor) (2006). Controversies in Obstetrics. Gynecology and Infertility. Jaypee Brothers. பக். 568. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180617041. http://www.barnesandnoble.com/w/controversies-in-obstetrics-gynecology-and-infertility-by-alka-kriplani-jaypee-brothers-medical-publishers/1013875827?ean=9788180617041.
- ↑ Alka Kriplani; Garima Kachhawa (2014). "Polycystic ovary syndrome: Novel insights into causes and therapy". Indian Journal of Medical Research 139 (4): 653–654. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-318-0-2238-4. http://www.ijmr.org.in/article.asp?issn=0971-5916;year=2014;volume=139;issue=4;spage=653;epage=654;aulast=Kriplani.
- ↑ Alka Kriplani; Reeta Mahey; Biswa Bhusan Dash; Vidushi Kulshreshta; Nutan Agarwal; Neerja Bhatla (July 2013). "Intravenous iron sucrose therapy for moderate to severe anaemia in pregnancy". Indian J Med Res 138 (1): 78–82. பப்மெட்:24056559.
- ↑ Manju Gita Mishra (2014). Treatment and Prognosis in Obstetrics & Gynecology. JP Medical. பக். 509. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351521624. https://books.google.com/books?id=QLfTAwAAQBAJ&q=alka+kriplani&pg=PR22.
- ↑ "AIIMS" (PDF). AIIMS. 2015. 25 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. 5 செப்டம்பர் 2020 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 March 2016 அன்று பார்க்கப்பட்டது.