அல்காட்ராஸ் தீவு
அல்காட்ராஸ் தீவு | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி]க்கு கிழக்கே உள்ள அல்காட்ராஸ் தீவின் காட்சி | |||||||||||||||||||||||
அமைவிடம் | சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, கலிபோர்னியா, யு எஸ் ஏ | ||||||||||||||||||||||
அருகாமை நகரம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா | ||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 37°49′36″N 122°25′22″W / 37.82667°N 122.42278°W | ||||||||||||||||||||||
பரப்பளவு | 22 ஏக்கர்கள் (8.9 ha)[1] | ||||||||||||||||||||||
நிறுவப்பட்டது | 1934 | ||||||||||||||||||||||
நிருவாக அமைப்பு | தேசியப் பூங்காப் பணி | ||||||||||||||||||||||
வலைத்தளம் | Alcatraz Island | ||||||||||||||||||||||
|
அல்காட்ராஸ் தீவு (Alcatraz Island), ஐக்கிய அமெரிக்க நாட்டின் கிழக்கே உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு கிழக்கே 9.1 மைல் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சிறு தீவு ஆகும்.[1]1847ஆம் ஆண்டில் இத்தீவில் கலங்கரை விளக்கம் மற்றும் கோட்டையுடன் கூடிய இராணுவ தளம், மற்றும் இராணுவச் சிறைச்சாலை நிறுவப்பட்டது.[2]1963ஆம் ஆண்டில் அல்காட்ராஸ் தீவு சிறைச்சாலை மூடப்பட்டதுடன், சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது. 1969ஆம் ஆண்டில் துவகக்த்தில் பூர்வகுடி அமெரிக்கர்களின்[3]குழு ஒன்று அல்காட்ராஸ் தீவை கையகப்படுத்தினர். 1972ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க அரசு இத்தீவை உள்துறையிடம் ஒப்படைத்தது. மேலும் இத்தீவு சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியாக மாற்றப்பட்டது. 1986ஆம் ஆண்டில் அல்காட்ராஸ் தீவை அமெரிக்காவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பாக அறிவித்தது.
தற்போது ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவைத் துறையின் நிர்வாகத்தில் உள்ள இத்தீவை சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு தீவாக மாற்றப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலிருந்து அல்காட்ராஸ் தீவுக்குச் செல்ல பயணிகள் படகு வசதி உள்ளது.
4 மே 2025 அன்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அல்காட்ராஸ் தீவில் உள்ள சிறைச்சாலையை மறுசீரமைத்து மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார்.[4]
படக்காட்சிகள்
[தொகு]-
1896ல் கோட்டையுடன் கூடிய அல்காட்ராஸ் தீவு
-
அல்காட்ராஸ் தீவு
-
அல்காட்ராஸ் தீவின் கலங்கரை விளக்கம்
-
மேல் நிலை நீர்த்தொட்டி, மின் உற்பத்தி நிலையம் (வலது)
-
1866ஆம் ஆண்டின் இராணுவ தளத்தின் மாதிரி வடிவம்
-
அல்காட்ராஸ் தீவு சிறைச்சாலையின் மாதிரி வடிவம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Alcatraz Island". Encyclopædia Britannica Online. (2009). Encyclopædia Britannica.
- ↑ Odier, Odier (1982). The Rock: A History of Alcatraz: The Fort/The Prison. L'Image Odier. ISBN 0-9611632-0-8.
- ↑ அமெரிக்காவின் பூர்வகுடிகள்
- ↑ "Trump says he will reopen Alcatraz prison". AP News (in ஆங்கிலம்). 2025-05-04. Retrieved 2025-05-05.