அலோர்னா கோட்டை
அலோர்னா கோட்டை அல்லது ஹாலன் கோட்டை என்று அழைக்கப்படும் இக்கோட்டை கோவாவின் பழமையான கோட்டைகளில் ஒன்றாகும். இது மபுசா நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் மராத்தா தாக்குதல்களுக்கு எதிராக சாவந்த்வாடியின் போன்ஸ்லே மரபினா்களால் கட்டப்பட்டது. இக்கோட்டையிலிருந்து, சுற்றியுள்ள நதி மற்றும் நிலத்தின் நற்காட்சிகளைக் காண முடியும்.
இந்த கோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. [1]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Alorna fort in bad shape". The Times of India. October 1, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 June 2013 அன்று பார்க்கப்பட்டது.