அலோரின் சாச்
அலோரின் சாச் | |
---|---|
சிந்துவின் மன்னர் | |
ஆட்சிக்காலம் | 631-711 |
முன்னையவர் | இராய் சகாசி (சிங்கசேனர்) |
பின்னையவர் | சந்திரன் |
குழந்தைகளின் பெயர்கள் | இராஜா தாகீர் |
மரபு | பிராமண அரச குலம் |
மதம் | இந்து சமயம் |
சாச் (Chach of Alor) (கி பி 631-711) (சிந்தி மொழி: چچ)[1] கி பி ஏழாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து சிந்துப் பகுதிகளை ஆண்ட பிராமண அரச குலத்தைச் சேர்ந்த மன்னராவார்.
சிந்துவின் முன்னாள் மன்னர் இரண்டாம் இராய் சகாசியின் அரசவையில் முதலமைச்சராக இருந்த பிராமண குல சாச் என்ற பிராமணர், இராய் சகாசியின் மரணத்திற்குப் பின் தன்னை சிந்துவின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.[1] பின்னர் மன்னரின் விதவை மனைவியை சாஜ் மன்னர் மணந்து கொண்டு பிராமண அரசசாட்சியை விரிவு படுத்தினார். இவரது வரலாறு, சாச் நாமா (Chach Nama) எனும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]சாஜ் ஒரு பிராமணர் ஆவார்.[2]இராய் வம்சத்தின் சிந்து மன்னர் இரண்டாம் இராய் சகிராசின் முதலமைச்சராக இருந்தவர் சாஜ். மன்னர் இராய் சகிராசின் மறைவிற்குப் பின்னர், கி பி 632-இல் இறந்த மன்னரின் விதவையான பட்டத்து ராணியை, முதலமைச்சரான சாஜ் மணந்து கொண்டு, அரச குடும்பத்தவருள் ஒருவராக ஆனார்.[1][1] தனது உடன்பிறந்தவன் சந்திரன் என்பவனை தனது முதலமைச்சராகக் கொண்டு, தனது இராச்சியத்தின் பரப்புகளை போர்களால் விரிவுப்படுத்தினான். 631 முதல் 711 முடிய சிந்து பகுதிகளை சாச் ஆண்டார்.
மன்னர் சாச்சின் மறைவிற்குப் பின்னர் அவரது சகோதரன் சந்திரன் சிந்து நாட்டை எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பின்னர் மன்னர் சாச்சின் மூத்த மகன் இராஜா தாகீர் பட்டத்திற்கு வந்தான்.