அலோயிசு பிரெட்ரிக் ரோஜென்கோபர்

அலோயிசு பிரெட்ரிக் ரோஜென்கோபர் (Alois Friedrich Rogenhofer) (22 திசம்பர் 1831, வியன்னா-15 சனவரி 1897, வியன்னா) என்பவர் ஆஸ்திரிய நாட்டினைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் ஆவார். இவர் வியன்னாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராக இருந்தார். இங்கு இவர் லெபிடோப்டெரா வரிசை விலங்குகளின் முதல் பாதுகாவலராக இருந்தார். ரோஜன்கோபர் முக்கியமாக லெபிடோப்டெரா, கைமெனோப்டெரா ஆகியவற்றின் வகைப்பாட்டியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ரோஜன்கோர் வியன்னாவில் சட்டம் பயின்றார். ஆனால் சட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இவர் விலங்கியல் அருங்காட்சியகத்தில் தன்னார்வலராக இணைந்து 1860இல் உதவியாளராகவும் 1867இல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். லெபிடோப்டெராவின் பல சிற்றினங்களை, குறிப்பாக நோவாரா பயணத்தில் சேகரிக்கப்பட்டவற்றை இவர் விவரித்தார். இவரைத் தவிர ஜோசப் மான் (1804-1889) அருங்காட்சியகத்தின் நலன்களுக்காக தொழில்நுட்ப வல்லுநராகவும் சேகரிப்பாளராகவும் பணியாற்றினார். லெபிடோப்டெராவின் பல சிற்றினங்களை ஜோசப் மான் விவரித்தார். இது அறிவியலுக்கு புதியது. மைக்ரோலெபிடோப்டெரா இவரது வகைப்பாட்டியல் மையமாகக் கொண்டது.[1] படைப்புகள் • காஜேடன் ஃப்ரீஹெர் வான் ஃபெல்டர் மற்றும் ருடால்ப் ஃபெல்டருடன் ரீஸ் ஃப்ரிகாட் நோவாரா. லெபிடோப்டெரா. மூன்று தொகுதிகள் (1865-1867).[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anon. (1897). "Rogenhofer, A. F.". Entomologist's Monthly Magazine 3 (33): 108. https://archive.org/details/entomologistsmo13compgoog/page/n135/mode/1up.