அலோஃபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலோஃபி, நியுவே
நகரம்
சாலையொன்றில் அலோஃபி மக்கள்
அலோஃபி சென்ட்ரல்
நியுவே நிலப்படத்தில் அலோஃபியின் அமைவிடம்
அலோஃபி அமைவிடம்
Location of Alofi. Also shows the 14 different villages.
நியுவேயின் நிர்வாகப் பிரிவுகள்; அலோஃபி தீவின் மேற்குப் புறம் உள்ளது.
நாடுநியுவே
சிற்றூர்வடக்கு அலோஃபி, தெற்கு அலோஃபி
அரசு
 • வடக்கு அலோஃபியின் அவைத்தலைவர்வைய்கா டுகுய்டோகா[1]
 • தெற்கு அலோஃபியின் அவைத்தலைவர்டால்டன் டாகெலாகி[2]
பரப்பளவு
 • வடக்கு,தெற்கு அலோபி இணைந்து பரப்பளவு46.48 km2 (17.95 sq mi)
ஏற்றம்[3]21 m (69 ft)
மக்கள்தொகை (2011)[4]
 • மொத்தம்1,611
 • அடர்த்தி12.5/km2 (32.46/sq mi)
 • வடக்கு அலோஃபி147
 • தெற்கு அலோஃபி434
தங்கிவாழும் மக்கள்தொகை[5]
 • வசிப்பவர்கள் (வடக்கு அலோஃபி)1,611
 • வருகையாளர்கள் (வடக்கு அலோஃபி)6,214
 • வசிப்பவர்கள் (தெற்கு அலோஃபி)1,611
 • வருகையாளர்கள் (தெற்கு அலோஃபி)6,214
நேர வலயம்UTC-11 (ஒசநே-11)
தொலைபேசி குறியீடு+683

அலோஃபி (Alofi) நியூசிலாந்து ஆட்புலத்தில் உள்ள அமைதிப் பெருங்கடல் தீவு நாடான நியுவேயின் தலைநகரம் ஆகும். மிகக் குறைந்த மக்கள்தொகை உள்ளத் தலைநகரங்களில் இது இரண்டாவது மிகச்சிறிய தலைநகரப் பிரதேசமாகும்; பலாவின் தலைநகரான கெருல்மூடு மிகச் சிறியதாகும். இது இரு சிற்றூர்களை உள்ளடக்கி உள்ளது: வடக்கு அலோஃபி மற்றும் தெற்கு அலோஃபி. அரசுக் கட்டிடங்கள் இங்கு அமைந்துள்ளன.[4]

புவியியல்[தொகு]

இது தீவின் மேற்கு புறத்தில் அலோஃபி விரிகுடாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நியுவேயைச் சூழ்ந்துள்ள பவளப் பாறையில் காணப்படும் ஒரே இடைவெளியில் இந்த விரிகுடா அமைந்துள்ளது. இந்த விரிகுடா தீவின் நீளத்தில் 30% ஆக (ஏறத்தாழ ஏழு கிமீ) தெற்கில் அலகிகீ முனையிலிருந்து வடக்கில் மகப்பூ முனை வரை நீண்டுள்ளது. உலகின் மிகபெரும் பற்தூரிகை வேலி அலோஃபியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு[தொகு]

சனவரி 2004இல் நியுவே ஏட்டா சூறாவளியால் தாக்கப்பட்டு மிகுந்த சேதமடைந்தது; இதில் இருவர் கொல்லப்பட்டனர். மருத்துவமனை உள்ளிட்ட அலோஃபியின் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்தன. இச்சூறாவளிக்குப் பிறகு அரசு அலுவலகங்கள் குறைவாக பாதிக்கப்பட்ட, மேற்கு கடலோரத்தில் 3 கிமீ (1.9 மீ) தொலைவில் மாற்றப்பட்டன.[6] இவ்விடம் தெற்கு அலோஃபியின் எல்லைக்குள் அமைந்துள்ளது.

வானிலை[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
அலோஃபி
பெமாமேஜூஜூ்செடி
 
 
260
 
28
23
 
 
250
 
29
24
 
 
300
 
28
24
 
 
200
 
27
23
 
 
130
 
26
22
 
 
80
 
26
21
 
 
90
 
25
20
 
 
100
 
25
20
 
 
100
 
26
21
 
 
120
 
26
21
 
 
140
 
27
22
 
 
190
 
28
23
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: வெதர்பேசு[3]
Imperial conversion
JFMAMJJASOND
 
 
10
 
82
73
 
 
9.8
 
84
75
 
 
12
 
82
75
 
 
7.9
 
81
73
 
 
5.1
 
79
72
 
 
3.1
 
79
70
 
 
3.5
 
77
68
 
 
3.9
 
77
68
 
 
3.9
 
79
70
 
 
4.7
 
79
70
 
 
5.5
 
81
72
 
 
7.5
 
82
73
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

அலோஃபி கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் அயன மண்டல மழைக்காட்டு வானிலையைக் கொண்டுள்ளது. ஈரப்பதம் இல்லாத காலம் என்பது இல்லை. சூன் முதல் செப்டம்பர் வரை சற்றே குறைந்த ஈரப்பதம் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த மாதங்களிலும் 60 மிமீ (2.4 இன்ச்)கூடுதலான மழை பொழிகிறது. இதே வானிலை உள்ள மற்ற நகரங்களைப் போலவே சராசரி வெப்பநிலை ஆண்டு முழுமையும் ஒரே சீராக 25 °செ (77 °ப்பா) ஆக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இந்நகரில் நியுவே பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. மண் பதிந்த பல சாலைகள் நகரில் அமைக்கப்பட்டுள்ளன.[7]

மேற்சான்றுகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அலோஃபி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோஃபி&oldid=3586005" இலிருந்து மீள்விக்கப்பட்டது