அலைபேசி அருங்காட்சியகம் (ஸ்லோவாகியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலைபேசி அருங்காட்சியகம்[தொகு]

ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்தவர் 26 வயதான ஸ்டீபன் போல்காரி. இவர் இதுவரை 3500 அலைபேசிகளை சேகரித்து வைத்திருக்கிறார்.15 வயதிலிருந்தே ஸ்டீபனுக்கு அலைபேசிகளின் மீது ஆர்வம் அதிகம்.தொழில்நுட்பம் ரீதியாக நிறைய கற்று கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அலைபேசிகளை சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். பழைய அலைபேசியை சேகரித்த ஒருவரிடம் 1000 அலைபேசிகளை மிக குறைந்த விலைக்கு வாங்கினார். பிறகு தன்னுடைய சேமிப்பில் இல்லாத பிராண்ட் அலைபேசிகளை தேடித் தேடிச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்று இவரிடம் 1,231 மாடல்களில் 3,500 அலைபேசிகள் இவரிடம் இருக்கின்றன. செங்கல் போன்று இருந்த நோக்கியா 3310 மாடலில் இருந்து தொடுதிரை ஸ்மார்ட் அலைபேசிகள் வரை உள்ளது. குறுகிய காலத்தில் அலைபேசிகளின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது என்கிறார் ஸ்டீபன் போல்காரி. இவரது வீட்டிலேயே அலைபேசி அருங்காட்சியகம்த்தை வைத்திருக்கிறார். சிறிய மர அலமாரிகளில் வீடு முழுவதும் அலைபேசிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்லோவாகியா சாதனைப் புத்தகத்தில் ஸ்டீபன் போல்காரி இடம் பெற்றிருக்கிறார்.

மேற்கோள்[தொகு]

அலைபேசி அருங்காட்சியகம் பற்றிய ஆங்கிலக் கட்டுரை