அலைசு கிரேசு குக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலைசு கிரேசு குக் (Alice Grace Cook) (18 பிப்ரவரி 1877 - 27 மே 1958) அல்லது கிரேசு குக் அல்லது ஏ. கிரேசு குக் எனப்படுபவர் ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் 1911 இல் சேர்ந்தார்,[1] இவர் 1916 இல் அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினர் ஆனார்.[2] இவரது குழுவே ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் மகளிர் குழுவாகும்.[3][4] இவர் விண்கற்களின் ஆய்வுக்காகவும் வெற்றுக் கண்ணால் அந்திக் காலொளியையும் நிலமுனைச் சுடரொளிகளையும் (வடமுனைச் சுடரொளி, தென்முனைச் சுடரொளி) நோக்கீடுகளைச் செய்தமைக்காகவும் பெயர்பெற்றவர். முதல் உலகப் போரின்போது குக் பிளேமட்டா விலசனுடன் இணைந்து பிரித்தானைய வானியல் கழகத்தின் விண்கற்கள் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். இவர் வால்வெள்ளிகளையும் பால்வழியில் உள்ள விண்மீன் வெடிப்புகளையும் கண்ணுற்றார். 1918 இல் V603 அக்குவிலே விண்மீன் வெடிப்பைக் கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவராவார்.[1] இப்பணி 1920-21 இல் இவருக்கு மரியா மிட்செல் கழகத்தின் எட்வர்டு சார்லெசு பிக்கெரிங் ஆய்வுநல்கையை வாங்கித் தந்தது.[5] இவர் 1921 முதல் 1923 வரை பிரித்தானிய வானியல் கழகத்தின் விண்கற்கள் பிரிவுக்கு இயக்குநராக இருந்தார்ஜோசப் ஆல்பிரெடு ஆர்டுகேசிலுடன் இணைந்து, இவர் ஜான் பிராங்க்ளின் ஆடம்சு எடுத்த ஒளிப்படத் தட்டுகளில் இருந்த 785 புதுப் பொதுஅட்டவணை வான்பொருள்களை இனங்கண்டு விவரித்தார்.[6]

குக் சுப்போல்கில் இருந்த சுட்டோவ்மார்கெட்டு எனுமிடத்தில் வாழ்ந்துவந்தார்.[5] இவர் 1958 இல் இறந்தார். இவர் தன் ஒருசaலைப் பணியாளர்களால் திறமையும் ஆழ்ந்த ஈடுபாடும் உள்ள வானியலாளராக மதிக்கப்பட்டார்.[1]

மேலும் படிக்க[தொகு]

  • ‘Death of Alice Grace Cook’, Journal of the British Astronomical Association, vol. 68, p 302.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Larsen, Kristine (December 2006). "Shooting Stars: The Women Directors of the Meteor Section of the British Astronomical Association". The Antiquarian Astronomer (Society for the History of Astronomy) 3: 75–82. Bibcode: 2006AntAs...3...75L. http://adsabs.harvard.edu/full/2006AntAs...3...75L. 
  2. "Royal Astronomical Society meeting report".
  3. Ogilvie, Marilyn Bailey (2000-03-01). "Obligatory Amateurs: Annie Maunder (1868–1947) and British Women Astronomers at the Dawn of Professional Astronomy". The British Journal for the History of Science 33 (1): 67–84. doi:10.1017/s0007087499003878. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-0874. 
  4. Briggs, Helen (2016-02-15). "Watching the heavens: The female pioneers of science" (in en-GB). BBC News. http://www.bbc.com/news/science-environment-35413738. 
  5. 5.0 5.1 Annie Jump Cannon (17 February 1921). "Report of the Astronomical Fellowship Committee". Annual Report of the Maria Mitchell Association 19: 15–17. Bibcode: 1921MMAAR..19...15C. http://adsabs.harvard.edu/full/1921MMAAR..19...15C. பார்த்த நாள்: 11 January 2014. 
  6. Steinicke. Observing and Cataloguing Nebulae and Star Clusters. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781139490108. 
  7. Alan Hunter (astronomer) (1958). "The Ordinary General Meeting of the Association Held on Wednesday, 1958 June 25". Journal of the British Astronomical Association (British Astronomical Association) 68 (8): 302. Bibcode: 1958JBAA...68..302B. http://articles.adsabs.harvard.edu/full/1958JBAA...68..302B. பார்த்த நாள்: 7 November 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைசு_கிரேசு_குக்&oldid=2457151" இருந்து மீள்விக்கப்பட்டது