அலைகற்றைத் திணறடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலைக்கற்றைத் திணறடித்தல் (bandwidth throttling) என்பது ஓர் இணையச் சேவை வழங்கி வேண்டுமென்றே இணையச் சேவையை மந்தப்படுத்தும் செயலைக் குறிக்கும். தகவல் தொடர்புப் பிணையங்களில் ஏற்படும் போக்குவரத்தை நெறிப்படுத்தும் முயற்சிகளிலும் அலைக்கற்றை நெரிசலைக் குறைக்கும் முயற்சிகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் எதிர்வினை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இவ்வாறு திணறடிக்கும் செயல் வலைப் பிணையத்தின் பல்வேறு இடங்களில் நேரலாம். ஒரு குறும்பரப்பு வலையமைப்புகளில் வழங்கி முறிவுகளைத் தடுக்கவும், வலைய நெரிசலைக் குறைக்கவும் கணினி நிர்வாகி அலைக்கற்றை திணறடித்தலைப் பயன்படுத்தலாம். சற்றே பரந்த அளவில், ஒரு இணையப் பயனரின் அலைக்கற்றை பயன்பாட்டைக் குறைக்க வேண்டி இணையச் சேவை வழங்கி அலைக்கற்றையைத் திணறடிக்கலாம்.