உள்ளடக்கத்துக்குச் செல்

அலெசாந்திரா கிலியானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெசாந்திரா கிலியானி
அலெசாந்திரா கிலியானி
பிறப்பு1307
இறப்பு1326 மார்ச்சு 26
தேசியம்இத்தாலி
துறைஉடற்கூறியலாளர்
அறியப்படுவதுஉடலியலாளர்

அலெசாந்திரா கிலியானி (Alessandra Giliani, 1307- 26 மார்ச்சு 1326) என்பவர் ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடற்கூற்றியலாளர். இடைக்காலத்தில் வாழ்ந்தவர்.

இளமை

[தொகு]

அலெசாந்திரா கிலியானி கி.பி 1307ல் பிறந்தார். 19 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்கவர். அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து, இறந்த உடலை அறுத்து அதிலிருந்து இரத்தம் வடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்குச் செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிய முடியும் எனக் கண்டறிந்தார்.

பணிகள்

[தொகு]

உலகில் முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, வேறு வண்ண திரவம் ஏற்றியவரும், அதனைப்பற்றி பதிவு செய்தவரும் அலெஸ்ஸாண்டிரா கிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியவும் படிக்கவும் முடிந்தது. இதன் மூலம் கிலியானி மருத்துவர்களுக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தார்.

இறந்த உடலை வெட்டி தயார்ப்படுத்துவது என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் உயிரைப் பயணம் வைக்கும் செயல். இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம் அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரகப் பார்க்கப்பட்டது. மேலும் அவாறு செயல்படுவோருக்குத் தூக்கு அல்லது கொலை தண்டனை பொது இடத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுள் உருவாக்கிய உடலை அறுப்பதும, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதும் மதநம்பிக்கைக்கு எதிரானதாகவும், கடவுள் மறுப்பு என்றும் போதிக்கப்பட்டது.

இரத்தம் வடிக்கும் முறை

[தொகு]

இக்காலத்தில்தான் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி, பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக, இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார். இறந்த உடலிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரத்தம் வடிந்த குழாய்களுக்கு, உள்ளே போனால் உறைந்துவிடும் ஒரு புதிய வண்ணத்திரவத்தையும் கண்டுபிடித்து இரத்த குழாய்களுக்குள் செலுத்தினார். இதனால் மிகச் சிறிய இரத்தக் குழாய்களை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்.

சேவை

[தொகு]

அலெஸ்ஸாண்டிரா கிலியானி மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் (Otto Angenius) என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஓட்டோ, கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி (Michele Medici) என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெசாந்திரா_கிலியானி&oldid=3730310" இலிருந்து மீள்விக்கப்பட்டது