அலெக்சேய் லியோனவ்
Appearance
அலெக்சேய் லியோனவ் aleksi Alexei Leonov | |
---|---|
1974 இல் லியோனவ் | |
சோவியத் விண்வெளிவீரர் | |
தேசியம் | உருசியர் |
பிறப்பு | அலெக்சேய் அர்கீபொவொச் லியோனவ் 30 மே 1934 லிசுத்வியாங்கா, மேற்கு சைபீரியா, உருசியா, சோவியத் ஒன்றியம் |
இறப்பு | 11 அக்டோபர் 2019 மாஸ்கோ, உருசியா | (அகவை 85)
வேறு பணிகள் | போர் வானோடி, விண்ணோடி |
தரம் | தளபதி, சோவியத் வான்படை |
விண்வெளி நேரம் | 7நா 00ம 32 நி |
மொத்த விண்வெளி நடைகள் | 1 |
மொத்த நடை நேரம் | 12 நிமி, 9 செக் |
பயணங்கள் | வசுக்கோத் 2, சோயுசு 19 |
திட்டச் சின்னம் | |
விருதுகள் | சோவியத் வீரர் (இரு தடவைகள்) |
அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ் (Alexey Arkhipovich Leonov, உருசியம்: Алексе́й Архи́пович Лео́нов, மே 30, 1934 – 11 அக்டோபர் 2019) சோவியத்/உருசியாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் 1965 மார்ச் 18 இல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
துணுக்குகள்
[தொகு]- ஆர்தர் சி. கிளார்க் தனது 2010: ஒடிசி இரண்டு நூலை லியோனவ், ஆந்திரே சாகரவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
- அலெக்சேய் லியோனவ் 1965 இலும் 1975 இலும் இரண்டு முறை சோவியத் ஒன்றியத்தின் நாயகர் (hero) என்ற விருதைப் பெற்றார். லெனின் விருது பெற்றவர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- விண்வெளியில் நடைப்பயணம் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- வஸ்ஹோத் 2