அலெக்சிய் சுதாரோபின்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக்சிய் சுதாரோபின்சுகி
Alexei Starobinsky
Zeldovich-100 participants.jpg
அலெக்சிய் சுதாரோபின்சுகி (மையம்), 2014
பிறப்புஅலெக்சிய் அலெக்சாந்திரோவிச் சுதாரோபின்சுகி
19 ஏப்ரல் 1948 (1948-04-19) (அகவை 73)
மாஸ்கோ உருசிய கூட்டரசு, சோவியத் ஒன்றியம்
வாழிடம்சோவிய்த் ஒன்றியம், உருசியா
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடு (1975)
ஆய்வு நெறியாளர்யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அறியப்படுவது
விருதுகள்
இணையதளம்
Main (Resume)

அலெக்சிய் அலெக்சாந்திரோவிச் சுதாரோபின்சுகி (Alexei Alexandrovich Starobinsky) (உருசியம்: Алексе́й Алекса́ндрович Староби́нский;பிறப்பு: 19 ஏப்பிரல் 1948) ஓர் உருசிய சோவியத் வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் 2014 இல் முன்னோடியாக அண்ட உப்பல் கோட்பாட்டினை ஆலன் குத், ஆந்திரே இலிந்தே ஆகியோருடன் இணைந்து அளித்ததற்காக, காவ்லி பரிசைப் பெற்ரார்.

இளம்பருவம்[தொகு]

இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்சின் மாணவர் ஆவார். இவர் 1972 இல் இப்பல்கலைக்கழகத்தில் இளவல் பட்ட்த்தைப் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை உருசிய அறிவியல் கல்விக்கழகத்தைச் சேர்ந்த இலாண்டவ் கோட்பாட்டு இயற்பியல் நிறுவனத்தில் 1975 இல் பெற்றார். இவர் இப்போது அந்நிறுவனத்தில் முதுநிலை அறிவியலாளராக உள்ளார். இவர் அங்கே 1990 முதல் 1997 வரை ஈர்ப்பு, அண்டவியல் துறையின் தலைவராக இருந்தார். மேலும் 1999 முதல் 2003 வரை இந்நிறுவன இணை இயக்குநராகவும் இருந்தார்.

இவர் 1970 களில் தொடக்கநிலைப் புடவியில் துகள் உருவாதல், சுழலும் கருந்துளைகளில் இருந்து துகளும் கதிர்வீச்சும் உருவாதல் ஆகிய நிகழ்வுகளுக்கான கோட்பாட்டு ஆய்வில் ஈடுபட்டார் (1973/74). இது ஃஆவ்க்கிங் கதிர்வீச்சுக் கோட்பாட்டுக்கான முன்னோடியாகும். இவர் 1979 இல் உருசிய அறிவியல் களத்தில் உப்பல் அண்டக் கோட்பாட்டின் முன்னோடியும்மாகத் திகழ்ந்தார். இந்த உப்பல் கட்டம் புடவி குவாட்ரில்லியன் மடங்கு ஒளி வேகத்த்தில் வளர்ந்த்து எனும் எடுகோளை முன்வைத்த்து.[1] இவர் சுதாரோபின்சுகி உப்பல் வகைமையை வரையறுத்தார். இது பொது சார்பியல் கோட்பாட்டில் இருந்து சற்றே வேறுபட்ட தாகும்.இது உப்பல் நிகழ்வை விளக்க முயல்கிறது. அமெரிக்க, மேலைநாட்டு இயற்பியலில், இக்கோட்பாட்டின் சனகால முன்னோடியாக ஆலன் குத் கருதப்படுகிறார்.

இவர் வருகைதரும் அறிவியலாளராக, 1991 இல் எக்கோல் நார்மேல் சுபீரியேரிலும் 2006 இல் என்றி பாயின்கேர் நிறுவனத்திலும் 1994 முதல் 2007 வரைகயோட்டோ பலகலிக்கழகத்தின் யுகாவா நிறுவனத்திலும் 2000/2001 இல்டோக்கியோ பல்கலைக்கழகத்திந்தொடக்கநிலைப் புடவி ஆராய்ச்சி மையத்திலும் விளங்கினார்.

இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராவார். இவர் 1996 இல் அக்கழகத்தின் ஏ.ஏ. பிரீடுமன் பரிசைப் பெற்றார். இவர் 1991 இல் இருந்து கோட்பாட்டு, செய்முறை இயற்பியல் இதழில் :(JETP Letters) இணை பதிப்பாசிரியராக விளங்கினார்:(JETP Letters); 1992 இல் இருந்து புத்திய இயற்பியலுக்கான பன்னாட்டு இதழிலும் 1993 முதல் 1996 வரை செவ்வியல், குவைய ஈர்ப்பு எனும் இதழிலும் 1987 முதல் 1997 வரை பொது சார்பியலும் ஈர்ப்பும் எனும் இதழிலும் இணை பதிப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவரும் வியத்செசுலாவ் முகனோவும் 2009 இல் தொமல்லா பரிசை வென்றனர். இப்பரிசு சுதாரோபின்சுகிக்கு அவரது அண்ட உப்பல் கோட்பாட்டுக்காகத் தரப்பட்டது. அதாவது புடவியின் உப்பல் கட்டத்தில் உருவாகும் ஈர்ப்புக் கதிர்வீச்சை கணித்த்தற்காக தரப்பட்டது.[2] இவர் 2010இல் ஆசுகார் கிளீன் பதக்கத்தைப் பெற்றார். இவரும் முகனோவும் 2012 இல் அமால்தி பதக்கத்தையும் 2013இல் குரூபர் அண்டவியல்பரிசையும் பெற்றனர். இவரும் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆலன் குத்தும் சுடான்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆந்திரே இலிந்தேவும் 2014 இல் இணைந்து நார்வே அறிவியல் இலக்கியக் கலவிக்கழகத்தின் காவ்லி பரிசைப் பெற்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]