அலெக்சாந்திரியா மிருகக்காட்சிசாலை

ஆள்கூறுகள்: 31°12′18″N 29°56′40″E / 31.2050384°N 29.9443692°E / 31.2050384; 29.9443692
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாந்திரியா மிருகக்காட்சிசாலை
ஒட்டகச்சிவிங்கி, அலெக்சாந்திரியா மிருகாட்சிச்சாலையில்
Map
31°12′18″N 29°56′40″E / 31.2050384°N 29.9443692°E / 31.2050384; 29.9443692
திறக்கப்பட்ட தேதி1958[2]
அமைவிடம்அலெக்சாந்திரியா, எகிப்து
நிலப்பரப்பளவு24 ஏக்கர்கள் (9.7 ha)[1]
முக்கிய கண்காட்சிகள்சிங்க மலை, சுவான் ஏரி
வலைத்தளம்https://www.thealexandriazoo.com/

அலெக்சாந்திரியா மிருகக்காட்சிசாலை (Alexandria Zoo) என்பது எகிப்தின் அலெக்சாந்திரியாவில் உள்ள மொவுகாவிற்கு அருகில் உள்ள ஓர் மிருகக்காட்சிசாலையாகும். மிருகக்காட்சிசாலையினைச் சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் மிருகக்காட்சிசாலையினைச் சுற்றி நடக்கவும், உலகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படும் விலங்குகளைக் காணலாம்.

விலங்குகள்[தொகு]

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இனங்களில் நீர்யானை, சிங்கம், வரிப்பட்டை கழுதைப்புலி, கலிபோர்னியா கடல் சிங்கம், வரிக்குதிரை, ஸ்கிமிட்டர் கொம்புகள் கொண்ட ஓரிக்ஸ், கரடிகள், குரங்குகள், ட்ரோமெடரி ஒட்டகங்கள், பார்பரி செம்மறி, கருஞ்சிறுத்தை, புள்ளிக் கழுதைப்புலி, பொன்னிறக் குள்ளநரி, இரட்டைத்திமில் ஒட்டகம் மற்றும் இலாமா முதலியன அடங்கும்.[2]

காட்சி அரங்கங்கள்[தொகு]

மிருகக்காட்சிசாலையில் ஊர்வன பகுதி, 'பறவைகள் மற்றும் சிறிய பாலூட்டிகள்' பிரிவு,[3] அருங்காட்சியகம் அமைந்துள்ளன. எகிப்தின் நாகம், நைல் முதலை மற்றும் மிக அருகிய இனமான எகிப்தின் ஆமை உள்ளிட்ட பல எகிப்திய இனங்களுக்கான ஊர்வன இல்லமும் உள்ளது.

பறவைகளில் பருந்துகள், கழுகுகள், வல்லூறும் பாலூட்டிகளில் ஆப்பிரிக்க முகடு முள்ளம்பன்றிகள் மற்றும் எகிப்தின் கீரிப்பிள்ளை அடங்கும்.[2]

விலங்கு நலன்[தொகு]

2000களின் முற்பகுதியில் மிருகக்காட்சிசாலையானது போதுமான கவனிப்பின்றி பழுதடைந்தது.[சான்று தேவை] எகிப்து விலங்கு உதவி, தன்னார்வலர்களின் குழுவுடன் சேர்ந்து, விலங்குகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த உதவத் தொடங்கியது. மிருகக்காட்சிசாலையின் யானையைப் பகலில் சங்கிலிகளிலிருந்து விடுவிப்பதற்கும், சுதந்திரமாகச் சுற்றித் திரிவதற்கும், அதே போல் பகல்நேரங்களி நிழல் தரும் கொட்டகை அமைப்பதற்கும், இரவுநேர தங்குமிடங்களை வலுப்படுத்துவதற்கும் மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் சிம்பன்சியின் உணவை மேம்படுத்துவதற்காக மேற்பார்வையாளர்களுக்கு உதவிப்புரிந்தனர். அவர்களின் வெளிப்புற பாதுகாப்பு அடைப்புகளை மேம்படுத்தினர். மேலும் இரவு தங்குமிடங்களில் மரத் தளங்களை நிறுவ முயற்சி மேற்கொண்டனர்.[4]

பிப்ரவரி 2015ல், இரண்டு ஆண்கள் அலெக்ஸாண்ட்ரியா மிருகக்காட்சிசாலையில் நுழைந்து ஹமாத்ரியாஸ் பபூன்களை குச்சிகளைக் கொண்டு அடித்தனர்.[5][6] பெரும்பாலான குரங்குகள் பாதுகாப்பிற்காகக் கூரைமீது ஓடின.[5][6] கூட்டத்திலிருந்தவர்கள் கூச்சலிட்டு, சிரித்தார்கள், கைதட்டினார்கள்.[5][6]

இரண்டு பேரும் குரங்கு அடைப்பில் கணிசமான நேரத்தைச் செலவிட்டனர். ஆனால் மிருகக்காட்சிசாலையில் பாதுகாப்பினர் இதில் தலையிடவில்லை.[5][6] இருப்பினும் இறுதியில், அந்த ஆண்கள் கைது செய்யப்படாமலும், எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்காமலும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். [5][6]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Al-Youm, Al-Masry (25 October 2016). "Alexandria zoo to undergo LE7 million development project".
  2. 2.0 2.1 2.2 "Alexandria Zoo - August 2009". zoochat.com. ZooChat. 14 November 2009. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010.
  3. "Alexandria". egyptiantravelguide.com. Egyptian Travel Guide. Archived from the original on 2 October 2010. பார்க்கப்பட்ட நாள் 19 September 2010.
  4. "About Us". animalaidegypt.org. Animal Aid Egypt. Archived from the original on 16 September 2010. பார்க்கப்பட்ட நாள் 19 September 2010.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Thugs Beat Up Monkeys, Steal Their Bananas At Alexandria Zoo", Egyptian Streets, February 7, 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Attackers beat up monkeys in Alexandria Zoo", Cairoscene, 08/02/2015.

வெளி இணைப்புகள்[தொகு]