அலெக்சாந்தர் செயித்சேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக்சாந்தர் இலியோனிதோவிச் செயித்சேவ்
Aleksandr Leonidovich Zaitsev
Александр Леонидович Зайцев.jpg
அலெக்சாந்தர் இலியோனிதோவிச் செயித்சேவ்
பிறப்புவார்ப்புரு:B-da
சுயோல்கோவோ, உருசிய சோவியத் ஒன்றியம்
துறைஇராடார் வானியல்
புறவெளி அறிதிறனாளருக்குச் செய்தியனுப்பல் (METI)
இராடார்வழி புவியண்மைக் குறுங்கோள் ஆய்வு
அறியப்படுவதுஉருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானொலிப் பொறியியல், மின்னனியல் நிறுவனத் தலைமை அறிவியலார்
the சேதிக் குழுவின் உருசிய வட்டார ஒருங்கிணைப்பாளர்

அலெக்சாந்தர் இலியோனிதோவிச் செயித்சேவ் (Aleksandr Leonidovich Zaitsev) (உருசியம்: Александр Леонидович Зайцев;பிறப்பு: மே 19, 1945) ஓர் உருசிய சோவியத் வானொலிப் பொறியாளரும் பிரியாசினோ சார்ந்த வானியலாளரும் ஆவார்.[1][2][3] இவர் இராடார் வானியல் கருவிகள் ஆய்விலும் புவியண்மை குறுங்கோள் இராடார் ஆய்விலும் சேதித் திட்டத்திலும் பணிபுரிகிறார்.

இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் மாஸ்கோவில் அமைந்த வானொலிப் பொறியியல், மின்னனியல் நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் ஆவார். இவர் உடுக்கணவெளிகளுக்கிடையே செய்திகலைச் செலுத்தும்/அனுப்பும் டீம் என்கவுண்டர் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார் [4] இதற்காக எவ்பதோரிய ஆழ்வெளி மையத்தைப் (EDSC) பயன்படுத்துகிறார்.[5] இவர் சேதி (SETI)குழுவிலும் அதைச் சார்ந்த ஆர்கசு திட்டத்திலும் உருசிய வட்டார ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறார்.[6]

இவரது வாழ்க்கைப்பணி முழுவதும் மூன்று பெரும் தலைப்புகளில் குவிந்திருந்தது. வெள்ளி, செவ்வாய், அறிவன் (புதன்) ஆகிய புவியண்மைக் கோள்களுக்கும் குறுங்கோள்களுக்கும் பயன்படும் இராடார் கருவிகளின் கோட்பாடு, வடிவமைப்பு, உருவாக்கிப் பயன்படுத்தல் புவிஆகிய கூறுபாடுகளில் அமைந்திருந்தது;[7] உடுக்கண வெளிகளுக்கு இடையே கதிர்வீச்சுவழிச் செய்திகளை அனுப்பல் அல்லது பரப்புதல்[8] இவரது அண்மைக்கால ஆய்வுப் புலமாகும். இவர் 2013 இல் ஓய்வு பெற்றார்.

இவர் 1992 திசம்பரில் 4179 தவுத்ததிசு குறுங்கோளை நோக்கினார்.[9][10] இதற்காக உக்கிரைனின் கிரீமியாவில் அமைந்த எவ்பதோரிய RT-70 கதிர்வீச்சுத் தொலைநோக்கியைக் கதிர்வீச்சுக் குறிகையைக் குறுங்கோளுக்கு அனுப்பும் அலைசெலுத்தியாகவும் செருமனியின் எபெல்சுபர்கு கதிர்வீச்சுத் தொலைநோக்கியை, குறுங்கோளில் இருந்துவரும் கதிர்வீச்சு எதிரொலியைப் பெறும் அலைவாங்கியாகவும் பயன்படுத்தினார்.

இவர் தான் 1995 ஜூனில் முதல் கண்டத்திடையிலான இராடார் வானியல் செய்முறையைச் செய்வதற்கான முயற்சியை உலக அளவில் மேற்கொண்டவர் ஆவார்; இந்தச் செய்முறையில் தரைசெலுத்த ஆய்வக சுட்டீவன் ஆசுட்ரோ குழு, யெவ்பதோரியா சார்ந்த செயித்சேவ் குழு, யப்பானிய காழ்சிமாவைச் சேர்ந்த யாசுகிரோ கொயாமா குழு ஆகிய குழுக்கள் பங்கேற்றன. ஆசுட்டிரோ குழு கொல்டுசுடோன் வளாக ஆழ்வெளி வலையமைப்பைப் பயன்படுத்தி செய்தியை பரப்பிப் பெற்றது. செயித்சேவ் குழு யெவ்பதோரியா களத்தைப் பயன்படுத்திட, கொயாமா குழு காழ்சிமாவில் இருந்து செய்தியைப் பெற்றது. இலக்கு குறுங்கோளாக 6489 கோலெவ்கா அமைந்தது. இப்பெயர் பங்கேற்ற வான்காணகங்களின் கூட்டுப் பெயராகும் (GOL-EV-KA அல்லது GOLdstone-EVpatoria-KAshima). இவர்களில் செயித்சேவ் கோள்களின், குறுங்கோளின் உட்கூற்றைக் கண்டுபிடிக்கவும் இராடார் முறையைப் பின்பற்றினார்.

இவர் 1999 இலும் 2003 இலும் அண்ட அழைப்புகளில் நடந்த தகவல் செலுத்தத்தை யெவ்பதோரியா கோளியல் இராடாரில் இருந்து மேற்பார்வையிட்டார் [11][12][13][14][15] இவரது தலைமையில் மாஸ்கோவின் இளைஞர் குழு பதினாட்டைச் செய்தியை இயற்றிப் புறவெளி அறிதிறனருக்குப் பரப்பியது. உடுக்கணவெளிக் கதிர்வீச்சுச் செய்திகளுக்கு இவர் முப்பிரிவுக் கட்டமைப்பை முன்மொழிந்தார். இது முனைவுறு சேதி (SETI) அல்லது மேதி (METI)என அழைக்கப்பட்டது.[16][17] இதில் இருந்து சேதி முரண்புதிர் எனும் சொற்றொடர் உருவாகியது.[18] சேதி இணைமுரண் அல்லது சேதி முரண்புதிர் என்பது,[18] உடுக்கணவெளியிடையே தகவல்தொடர்பு கொள்ளும் அளவுக்கு வளர்ந்த நெடுந்தொலைவில் அமைந்த இரண்டு நாகரிகங்கள் ஒன்று மற்றொன்றை அழைக்கும் வரை தொடர்பேதும் கொள்ளாமலே அமைதியாக தொர்ந்து இருக்கும் எனும் தோற்றநிலை முரண்புதிரைக் குறிக்கும். இவர் 2005 இல்"The Drake Equation: Adding a METI Factor" எனும் கட்டுரையில் உடுக்கணவெளியிடையேயான தொடர்புக்கு உயர்தொழில்நுட்ப வளர்ச்சி மாட்டும் போதாது.செய்திக் குறிகைகளை அனுப்பவேண்டிய தேவையை நடைமுறையில் உணர்தலும் கட்டாயம் ஆகும்.

இவர் 2006 முதல் 2011 வரை பின்வரும் திட்டங்களில் பங்கேற்றார்.

 1. ARTE அமைப்பின் சுகித்லோவ்சுகியின் "Die Außerirdischen" ("அனைத்து புறதர்களையும் அழைத்தல்") எனும் செருமனி- பிரான்சு தொலைக்காட்சி ஆவண உருவாக்கம்;[19][20]
 2. விளாடிசுலாவ் சிதொரோவின் "பேரமைதியை வெல்வோம் (Overcome the Great Silence)" எனும் உருசிய ஆவண உருவாக்கம் Sidorov,[21]
 3. பிராசுபெர் தெ உரூசின் "புறதர்களை அழைத்தல் (Calling E.T.)" எனும் ஆவண உருவாக்கம் [22]
 4. பிராசுபெர் தெ உரூசின் "புறதர் துணுக்குகள் (Alien Bits)" எனும் ஆவண உருவாக்கம்[23]

இவர் தன் முதுவர் பட்டத்தை வானொலிப் பொறியியலில் மாஸ்கோ சுரங்கப் பல்கலைக்கழகத்தில் 1967 இலும் முனைவர் பட்டத்தை 1981 இலும் பெற்றார். இவர் தன்முதுமுனைவர் பட்டத்தை உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் மாஸ்கோவில் அமைந்த வானொலிப் பொறியியல், மின்னனியல் நிறுவனத்தில் இருந்து 1997 இல் இராடார் வானியலில் பெற்றார். இவர் விண்வெளிக் காப்பு அறக்கட்டளையிலும் சேதி (SETI)குழுவிலும் அதைச் சார்ந்த ஆர்கசு திட்டத்திலும் ஐரோப்பிய வானொலிப் பொறியியல் குழுவிலும் உறுப்பினர் ஆவார்.[24]

விருதுகள்[தொகு]

 • இவர் 1985 இல் அறிவியலில் சோவியத் ஒன்றியத்தின் அரசு பரிசைப் பெற்றார்.
 • இவர் 1989 இல் சோவியத் விண்வெளிக் கூட்டமைப்பின் கொரொல்லோவ் பதக்கம் பெற்றார்.[25]
 • கோட்பாட்டு வானியல் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் நிகோலாய் செர்னிக் தான் கண்டுபிடித்த குறுங்கோளுக்கு 1995 இல் 6075 செய்த்சேவ்என இவரது நினைவாகப் பெயரிட்டார்.[26]
 • இவர் 1997 இல் சாயில்கோவ்சுகி பதக்கத்தை உருசிய விண்வெளிக் கூட்டமைப்பில் இருந்து பெற்றார்i.
 • இவர் 2003 இல் உக்ரைனிய வெள்ளிவிழா பதக்கத்தை 'எவ்பதோரியாவின் 2500 ஆம் ஆண்டு விழா நினைவாகப் பெற்றார்.[27]

மேற்கோள்கள்[தொகு]

 1. Picture of Alexander Zaitsev during the ERAC Conference at the Starkenburg Observatory in Heppenheim, Germany, in 2004; http://www.setileague.org/photos/eurose04/euro0407.jpg
 2. Official picture of Alexander Zaitsev - http://www.spacedaily.com/images/seti-alexander-zaitsev-bg.jpg
 3. Summary - http://www.daviddarling.info/encyclopedia/Z/Zaitsev.html
 4. Interstellar radio messages - http://www.cplire.ru/html/ra&sr/irm/index.html
 5. Yevpatoria Deep Space Communication Center - http://evpatoria.asteroids.ru/DSCC.ENG/index.htm
 6. SETI League: http://www.setileague.org
 7. EuroRadar - Origin and Concepts of Design - http://spaceguard.esa.int/tumblingstone/issues/num10/euroradar.htm
 8. Sending and Searching for Interstellar Messages - http://fire.relarn.ru/126/docs/iac_07_a4_2.02.pdf
 9. Article "One-dimensional Radio Message for 'Blind' Aliens" - http://www.orbit.zkm.de/?q=node/187
 10. [MPC No 25445, 1995] - excerpt of Lutz D. Schmadel, Dictionary of Minor Planet Names, Springer, 5th Edition, page 508, article "(6075) Zaitsev"
 11. Cosmic Call 2003 - http://lnfm1.sai.msu.ru/SETI/koi/bulletin/23/1.1.html
 12. Planetary radar astronomy
 13. Article "Design and Implementation of the 1st Theremin Concert for Aliens" - http://www.cplire.ru/html/ra&sr/irm/Theremin-concert.html
 14. Article SETI-METI "Past - Present - Future" - http://www.setileague.org/editor/motion.htm
 15. One-dimensional Radio Message for 'Blind' Aliens - http://www.orbit.zkm.de/?q=node/187
 16. METI - http://www.cplire.ru/html/ra&sr/irm/METI_Art.html
 17. Messaging to Extra-Terrestrial Intelligence
 18. 18.0 18.1 The SETI Paradox - http://arxiv.org/abs/physics/0611283
 19. German Announcement of TV transmission "Die Außerirdischen" - http://www.documentary-campus.com/p/calling_all_aliens/
 20. http://channel.nationalgeographic.com/episode/calling-all-aliens-4206#tab-Photos/0
 21. http://www.setileague.org/press/silence.htm
 22. http://www.prosperderoos.com/works/film-calling-et.html
 23. https://vimeo.com/29664307
 24. ERAC homepage - http://www.eracnet.org/
 25. Korolev Medal - http://www.nasm.si.edu/research/dsh/artifacts/IS-Korolev.htm
 26. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (6075) Zajtsev. Springer Berlin Heidelberg. பக். 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-00238-3. http://www.minorplanetcenter.net/db_search/show_object?utf8=%E2%9C%93&object_id=6075. பார்த்த நாள்: 14 April 2016. 
 27. http://www.cplire.ru/html/ra&sr/irm/personalia/medal.html