உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் சவீனொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் இவானொவிச் சவீனொவ்
Алекса́ндр Ива́нович Сави́нов
பிறப்புசூலை 17, 1881
சராத்தொவ், உருசியா
இறப்புபெப்ரவரி 25, 1942(1942-02-25) (அகவை 60)
லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
கல்விரேப்பின் கலைக் கல்லூரி
அறியப்படுவதுஓவியம் வரைதல்
அரசியல் இயக்கம்யதார்த்தவாதம்

அலெக்சாண்டர் இவானொவிச் சவீனொவ் (Alexander Ivanovich Savinov, உருசியம்: Алекса́ндр Ива́нович Сави́нов, சூலை 17, 1881 - பெப்ரவரி 25, 1942) உருசிய சோவியத் ஓவியர். இவர் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களை வரைந்துள்ளார். லெனின்கிராட் நகரைச் சேர்ந்த இவர் “லெனின்கிராட் பள்ளி” ஓவியப் பாணியின் முக்கிய ஓவியர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சவீனொவ் சரத்தோவ் என்னும் ஊரில் மர வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1902-1908 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் இம்பீரியல் கலைக் கல்லூரியில் கல்வி பயின்று பட்டம் பெற்ற பின்னர் இத்தாலி சென்று ஓவியக் கலையில் மேலும் பயிற்சி பெற்றார். இத்தாலியில் இருந்து திரும்பியவர் லெனின்கிராட் ஓவியப் பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[1].

இவரது புகழ் பெற்ற ஓவியங்கள் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள உருசிய அரசு அருங்காட்சியகம், மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ் உட்படப் பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anniversary Directory graduates of Saint Petersburg State Academic Institute of Painting, Sculpture, and Architecture named after Ilya Repin, Russian Academy of Arts. 1915 - 2005. - Saint Petersburg: Pervotsvet Publishing House, 2007.- p.43-46, 48.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_சவீனொவ்&oldid=4348413" இலிருந்து மீள்விக்கப்பட்டது