உள்ளடக்கத்துக்குச் செல்

அலெக்சாண்டர் குளோபோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாண்டர் குளோபோனின்
Александр Хлопонин
குhloponin in 2015
உருசிய கூட்டமைப்பின் அரசாங்கத்தின் துணைப் பிரதமர்
பதவியில்
19 சனவாி 2010  7 மே 2018
வட காகசியன் ஃபெடரல் மாவட்டத்திற்கான ஜனாதிபதி தூதர்
பதவியில்
19 சனவாி 2010  12 மே 2014
குடியரசுத் தலைவர்டிமிட்ரி மெத்வெடேவ்
விளாடிமிர் புடின்
முன்னையவர்அலுவலகம் நிறுவப்பட்டது
பின்னவர்செர்ஜி மெலிகோவ்
4ஆவது கிராசுனோயார்சுக் கிராய் ஆளுநர்
பதவியில்
17 அக்டோபா் 2002  19 சனவாி 2010
முன்னையவர்அலெக்சாண்டர் லெபெட்
நிகோலே அஷ்லபோவ் (நடிப்பு)
பின்னவர்எட்காம் அக்புலடோவ் (நடிப்பு)[1]
Lev Kuznetsov
தைமாின் 2வது ஆளுநர்
பதவியில்
21 பெப்ரவாி 2001  10 அக்டோபா் 2002
முன்னையவர்ஜென்னடி நெடலின்
பின்னவர்ஓலெக் புடர்கின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 6, 1965 (1965-03-06) (அகவை 61)
கொழும்பு, இலங்கை டொமினியன்
அரசியல் கட்சிஐக்கிய உருசியா
முன்னாள் மாணவர்உருசிய கூட்டமைப்பின் அரசாங்கத்தின் கீழ் உள்ள நிதிப் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி, தொழிலதிபர்

அலெக்சாண்டர் ஜெனடிவிச் குளோபோனின் (Alexander Khloponin) (பிறப்பு மார்ச்சு 6, 1965) ஓர் உருசிய முன்னாள் அரசியல்வாதி. அக்டோபர் 2002 முதல் 2010 சனவரி வரை சைபீரியாவில் அமைந்துள்ள குராசுநோயார்சுக் குரையின் ஆளுநராக குளோபோனின் பணியாற்றினார். இவர் ஐக்கிய உருசியாவின் உறுப்பினராக இருந்தார்.

பின்னணி மற்றும் கல்வி

[தொகு]

குளோபோனின் மார்ச்சு 6, 1965 அன்று இலங்கையில் உள்ள கொழும்பில் பிறந்தார்.[2] இவர் மாஸ்கோ நிதி நிறுவனத்தில் நிதிப் பட்டம் பெற்றார்.பின்னர் இவர் நோரில்சுக் நிக்கல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2001ஆம் ஆண்டில், இவர் வடக்கு சைபீரியாவில் உள்ள தைமிர் தன்னாட்சி ஓக்ருகின் ஆளுநரானார். 2002 வரை இந்தப் பதவியில் இருந்தார்.[3] குளோபோனின், கிராசுனோயார்சுக் கிராயின் ஆளுநர் தேர்தலில், முக்கிய வணிகத் தொடர்புகளைக் கொண்ட மற்றொருவரான அலெக்சாண்டர் உச்சுக்கு எதிராக வெற்றி பெற்றார். போட்டி ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருந்தது. குளோபோனின் இரண்டாம் கட்டத் தேர்தலில்கூட 48% வாக்குகளை மட்டுமே பெற்றார்.[4]

உருசிய குடியரசுத்தலைவா் டிமிட்ரி மெட்வெடேவ் சனவரி 2010இல், வடக்கு காகசியன் கூட்டாட்சி மாவட்டத்தை (தெற்கு கூட்டாட்சி மாவட்டத்திலிருந்து) நிறுவ உத்தரவிட்டார். மேலும் குளோபோனினை ஆளுநர் பதவியிலிருந்து விடுவித்து, உருசிய கூட்டமைப்பின் துணைப் பிரதமராகவும், புதிய கூட்டாட்சி மாவட்டத்திற்கான குடியரசுத்தலைவாின் முழு அதிகாரம் பெற்ற தூதராகவும் நியமித்தார்.[5][6] மே 12 அன்று குடியரசுத்தலைவா் விளாதிமிர் புட்டின், குளோபோனினுக்குப் பதிலாக உள்துறை அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மெலிகோவை தூதர் பதவியில் நியமித்தார்.[7]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அங்கீகாரம்

[தொகு]
2011 இல் குளோபோனின்

2002ஆம் ஆண்டில், உருசிய வணிக வார இதழான எக்ஸ்பர்ட் பத்திரிகையால் அலெக்சாண்டர் குளோபோனின் ஆண்டின் சிறந்த நபராகப் பெயரிடப்பட்டார். குளோபோனினின் மகள், லியுபோவ் குளோபோனினா, இலண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சில் படித்தார்..[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Эдхам Акбулатов временно исполняет обязанности губернатора Красноярского края". January 20, 2010.
  2. "Official Website of the Government of the Russian Federation". archive.government.ru. Retrieved 2022-05-10.
  3. "Russian Administrative divisions".
  4. http://www.viperson.ru/wind.php?ID=1610 (in Russian)
  5. "Archived item". Archived from the original on March 30, 2010. Retrieved 30 March 2010.
  6. "Указ о назначении Александра Хлопонина Заместителем Председателя Правительства и полномочным представителем Президента в Северо-Кавказском федеральном округе". January 19, 2010.
  7. Kremlin's reshuffle in North Caucasus shows force trend in policies, experts say, Caucasian Knot, Moscow, 13 May 2014 பரணிடப்பட்டது சூலை 13, 2015 at the வந்தவழி இயந்திரம். Retrieved August 4, 2014.
  8. "Don't Take Russians' Threats Seriously Until You Know Where Their Kids Live". Observer (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-07-24. Retrieved 2022-05-10.