அலெக்சாண்டர் கில்லன் மாக்பெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலெக்சாண்டர் கில்லன் மாக்பெத் (Alexander Killen Macbeth) ஆத்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக் கழகத்தில் அங்காசு வேதியியல் இருக்கை பேராசிரியராகப் 1928 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் நாள் வரை பணிபுரிந்தார். இவரது காலம் 1889 முதல் 1957 வரையுள்ள காலமாகும். பொதுவாக இவரை கில்லன் அல்லது ஏ. கில்லன் மாக்பெத் என்ற பெயரால் அழைப்பார்கள். அயர்லாந்தில் பிறந்து கல்வி கற்ற இவர் ஒரு கரிம வேதியியலாளராக வாழ்ந்தார். 1946 ஆம் ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் சியார்ச்சு ஆகியோரின் துணை வேதியியலராக நியமிக்கப்பட்டார், 1955 ஆம் ஆண்டில் மாக்பெத் ஆத்திரேலிய அறிவியல் அகாதமியின் சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1][2][3][4][5][6].

மேற்கோள்கள்[தொகு]