உள்ளடக்கத்துக்குச் செல்

அலுமினியம் தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் தெலூரைடு
Aluminium telluride
பெயர்கள்
வேறு பெயர்கள்
μ-தெலூரைடு(டைதெலூராக்சோ)டை அலுமினியம், ஈரலுமினியம் முத்தெல்லூரைடு, அலுமினியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12043-29-7 Y
ChemSpider 22797847 Y
EC number 234-939-4
InChI
  • InChI=1S/2Al.3Te Y
    Key: RETRTUZSQWNRQG-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/2Al.3Te/q2*+3;3*-2
    Key: IBHHFWUKPAWXSJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12674524
  • [Te]=[Al][Te][Al]=[Te]
பண்புகள்
Al2Te3
வாய்ப்பாட்டு எடை 436.76 கி/மோல்
தோற்றம் அடர் சாம்பல் முதல் கருப்பு வரையிலான திடப்பொருள்[1]
அடர்த்தி 4.5 கி/செ.மீ3[1]
உருகுநிலை 895[2] °C (1,643 °F; 1,168 K)
சிதைவடையும்
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அலுமினியம் தெலூரைடு (Aluminium telluride) என்பது Al2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியமும் தெலூரியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

1,000 °செல்சியசு வெப்பநிலையில் (1,270 கெல்வின்; 1,830 °பாரங்கீட்டு) அலுமினியம் உலோகத்தை தனிம தெலூரியத்துடன் நேரடியாகச் சேர்த்து இணைப்பதன் மூலம் அலுமினியம் தெலூரைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[1]

பண்புகள்

[தொகு]

அலுமினியம் தெலூரைடு அடர் சாம்பல் முதல் கருப்பு நிறத்தில்[1] காணப்படும் காற்று உணர்திறன் கொண்ட திடப்பொருளாகும்.[3] 2.4 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளியைக் கொண்டுள்ளது.[4] ஈரப்பதமான காற்றில் சிதைவடையும்.[5]

தூய வடிவத்தில், அலுமினியம் தெலூரைடு குறைந்தது இரண்டு கட்டங்களில் தோன்றுகிறது. ஆரஞ்சு-சிவப்பு குறைந்த வெப்பநிலை (α) மாற்றம் 720 °செல்சியசு (993 கெல்வின்; 1,328 °பாரங்கீட்டு) வெப்பநிலையில் மஞ்சள் உயர் வெப்பநிலை (β) வடிவமாக மாறுகிறது. β- வடிவத்திலிருந்து α-Al2Te3 வடிவத்திற்கு மாறுதல், இது வேறுபட்ட வெப்ப பகுப்பாய்வு மூலம் கவனிக்க முடியாத அளவுக்கு ஒரு சிறிய என்தால்பி மாற்றத்துடன் தொடர்புடையதாக உள்ளது. மாற்றப் புள்ளிக்குக் கீழே நீடித்த காய்ச்சிக்குளிரவைத்தல் செய்த பிறகு நடைபெறுகிறது. α வடிவம் ஒற்றைச்சரிவு படிக அமைப்பில் a = 13.885 Å, b = 7.189 Å, c = 4.246 Å, p = 90.21° ஆகிய அணிக்கோவை அளவுருக்களுடன் கூடுதல் மேல்கட்டமைப்புடன் படிகமாகிறது. β வடிவம் P21/c என்ற இடக்குழுவுடன் a = 7.181(1) Å, b = 12.848(3) Å, c = 14.167(3) Å, மற்றும் b= 90.04(2)° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் கூடிய ஒற்றைச்சரிவு படிக அமைப்பில் படிகமாகிறது. இந்த வடிவம் ஒரு தனி கட்டமைப்பு வகையைக் குறிக்கிறது. தெலூரியம் அணுக்கள் (001) தளத்திற்கு இணையாக ஓர் அறுகோண அடர்த்தியான பொதியை உருவாக்குகின்றன; நான்முகி காலியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு அலுமினியம் அணுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நான்முகி காலியிடங்கள் ஓர் அடுக்கு அமைப்பு உருவாகும் வகையில் ஆக்கிரமிக்கின்றன. சில ஆதாரங்கள் குறைபாடுள்ள வூர்ட்சைட் வகையின் மற்றொரு வடிவத்தையும் தெரிவிக்கின்றன.[3]

பயன்கள்

[தொகு]

அலுமினியம் தெலூரைடு குறைக்கடத்தித் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.[1] ஐதரசன் குளோரைடுடன் வினைபுரிந்து ஐதரசன் தெலூரைடை உற்பத்தி செய்யவும் இதைப் பயன்படுத்தலாம்.[6]

Al2Te3 + 6 HCl -> 3 H2Te + 2 AlCl3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dale L. Perry (2016). Handbook of Inorganic Compounds. CRC Press. ISBN 978-1-4398-1462-8. Retrieved 2024-07-28 – via Google Books.
  2. N. Prabhu, J. M. Howe (1990). "The Al-Te (Aluminum-Tellurium) system". Bulletin of Alloy Phase Diagrams 11 (2): 202–206. doi:10.1007/BF02841706. 
  3. 3.0 3.1 Conrad, O; Schiemann, A; Krebs, B (1997). "Die Kristallstruktur von β-Al2Te3". Zeitschrift für anorganische und allgemeine Chemie 623: 1006–1010. doi:10.1002/zaac.199762301157. https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1002/zaac.199762301157. 
  4. Batsanov, Stepan S.; Batsanov, Andrei S. (2012). Introduction to Structural Chemistry. Springer Netherlands. p. 130. ISBN 978-94-007-4771-5. Retrieved 2024-07-17 – via Google Books.
  5. Brauer, Georg (2 December 2012). Handbook of Preparative Inorganic Chemistry V1. Elsevier Science. p. 826. ISBN 978-0-323-16127-5. Retrieved 2024-07-17 – via Google Books.
  6. Riedel, Erwin; Janiak, Christoph (2022). Anorganische Chemie. De Gruyter. ISBN 978-3-11-069458-1 – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_தெலூரைடு&oldid=4285787" இலிருந்து மீள்விக்கப்பட்டது