அலுமினியம் இண்டியம் ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலுமினியம் இண்டியம் ஆர்சனைடு (Aluminium indium arsenide) என்பது AlInAs (AlxIn1-xAs) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு குறைக்கடத்திச் சேர்மமாகும். இண்டியம் அலுமினியம் ஆர்சனைடு என்ற பெயராலும் இக்குறைகடத்தி அழைக்கப்படுகிறது. காலியம் இண்டியம் ஆர்சனைடு (GaInAs) குறைக்கடத்தியின் அணிக்கோவை மாறிலிகளுக்கு அருகான மதிப்புகளையும் அதைவிட கூடுதலான ஆற்றல் இடைவெளியையும் இக்குறைகடத்தி கொண்டுள்ளது. (AlxIn1-xAs) என்ற வாய்ப்பாட்டிலுள்ள X, 0 மற்றும் 1 என்ற மதிப்புகளை ஏற்கிறது. InAs மற்றும் AlAs சேர்மங்களுக்கிடையிலான விதிக்கட்டுபாடில்லாத கலப்புலோகம் என்பதை இம்மதிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. விகிதக்கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத கலப்புலோகமிது என்பதை AlInAs என்ற வாய்ப்பாடு தெரிவிக்கிறது.

தாங்கல் அடுக்குகளாக உறுமாற்ற உயர் எலக்ட்ரான் இயக்க திரிதடையங்களில் அலுமினியம் இண்டியம் ஆர்சனைடு பயன்படுத்தப்படுகிறது. இங்கு இது காலியம் ஆர்சனைடு தளப்பொருள், காலியம் இண்டியம் ஆர்சனைடு அலைவரிசை இவற்றிடையிலான அணிக்கோவை மாறிலிகளை சமப்படுத்துகிறது. இண்டியம் காலியம் ஆர்சனைடுகளுடன் சேர்த்து குவாண்டம் படலமாகச் செயற்படும் மாற்று அடுக்குகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அமைப்புகள் அகன்றவரிசை குறைக்கடத்தி லேசர்களில் பயன்படுத்தப்படுகின்றன.

முன்பாதுகாப்பு[தொகு]

AlInAs இன் நச்சுத்தன்மை குறித்து முழுமையாக ஆராயப்படவில்லை. தூளாக இருக்கும் போது இது கண், தோல், நுரையீரல்களில் எரிச்சலை உண்டாக்குகிறது. மேலும் இது தொடர்பான மூலப்பொருட்களும் ஆராயப்பட்டு சமீபத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Environment, health and safety issues for sources used in MOVPE growth of compound semiconductors; D V Shenai-Khatkhate, R Goyette, R L DiCarlo and G Dripps, Journal of Crystal Growth, vol. 1-4, pp. 816-821 (2004); எஆசு:10.1016/j.jcrysgro.2004.09.007