அலுபொல அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுபொல நீர்வீழ்ச்சி
அமைவிடம்இலங்கை சபரகாமுவாகா மாகாணம்
ஏற்றம்325 மீட்டர்
மொத்த உயரம்80 மீட்டர் (262 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிவேவல் ஆறு (வளைவை ஆறு)

அலுபொல நீர்வீழ்ச்சி இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரி நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அருகாமையில் உள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. அலுபொல நீர்வீழ்ச்சி வளவை ஆற்றின் கிளையாறான வேவல் ஆற்றில் அமைந்துள்ளது இது பதுருகல மலையின் தெற்குச் சாய்வில் உள்ள களுகல்தோவ என்னும் இடத்தில் இருந்து ஊற்றெடுக்கிறது. உலர் பருவத்திலும் நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்கிறது. இந்நீர்வீழ்ச்சியை மறித்து கட்டப்ப்பட்டுள்ள சிறிய அணைக்கட்டு ஒன்றின் மூலம் அருகிலுள்ள வேவல் தேயிலைப் பெருந்தோட்டத்துக்கான மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் அணைக்கட்டில் இருந்தான நீர் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கருகாமையில் இரத்தினக்கல் அகழ்வுகள் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது. நீர் வீழ்ச்சியில் ஏற்படும் திடீர் நீரோட்டங்களால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

சூழற்தொகுதி[தொகு]

நீர் வீழ்ச்சிக்கு மேற்பகுதியில் சாம்பர் மான், மரை, பன்றி மற்றும் ஊர்வன போன்றன வசிக்கின்றன நீர் வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் அட்டைகள் செறிந்து வாழ்கின்றன். நீர் வீழ்ச்சியின் கீழ்ப் பகுதியில் சிறிய நீர்வீழ்ச்சியான அல்கெட்டிய நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

நீர்வீழ்ச்சி சிவனொளிபாதமலைக் காட்டின் எல்லையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள முக்கிய நகரம் இரத்தினபுரி நகரமாகும். இரத்தினபுரி நகரில் இருந்து பம்பரகொட்டுவ அல்லது வேவல் தோட்டத்துக்கான பேருந்தில் அல்வத்துர வரைச் சென்று அங்கிருந்து சந்தியில் இடதுபக்க பாதையில் செல்வதன் மூலம் நீர் வீழ்ச்சியை அடையலாம்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுபொல_அருவி&oldid=3846486" இலிருந்து மீள்விக்கப்பட்டது