அலி முராத்து மேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி முராத்து மேட்டின் கிராமம்

அலி முராத்து மேடு (Ali Murad Mound) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தாது மாவட்டத்தில்[1] உள்ள இயோகி தாலுகாவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் என். ஜி. மசூம்தார் என்பவரின் பெயரிடப்பட்டு இந்த தொல்பொருள் தளம் ஒன்றாக ஆராயப்பட்டது.[2] இது தாதுவில் இருந்து தென்மேற்கு நோக்கி 20 மைல் தொலைவிலும்,[3] காசி சா மேட்டிலிருந்து எட்டு மைல் தொலைவிலும் மற்றும் இயோகி நகரின் தெற்கே 14 மைல் தொலைவிலும் இந்த அலி முராத்து மேடு அமைந்துள்ளது.[4] மேட்டின் உச்சியில், கல் தொகுதிகளால் கட்டப்பட்டும், தற்காப்பு சுவர்களால் சூழப்பட்டதுமான ஒரு பழங்கால குக்கிராமம் கண்டுபிடிக்கப்பட்டது. அரப்பா கலாச்சாரத்தின் மட்பாண்டங்கள், காளை மற்றும் பன்றியின் சிலைகள், கருங்கல் செதில்கள், சிறிய வெண்கல கோடாரி, மணிகள், போன்றவை இங்கிருந்ததாக ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ அதிகாரியும் தொல்லியல் அறிஞருமான மோர்டிமர் வீலர் தெரிவித்துள்ளார்.[5] உயரமான அலி முராத்து மேட்டின் மீது கோட்டையாலான பழங்கால கிராமம் அல்லது அரண்மனை இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ali Murad Village Mound, Johi, District Dadu" (in en-gb). http://antiquities.sindhculture.gov.pk/index.php/mound/ali-murad-village-mound-johi-district-dadu. 
  2. Majumdar, Nani Gopal (1934) (in en). Explorations in Sind: Being a Report of the Exploratory Survey Carried Out During the Years 1927-28, 1929-30 and 1930-31. Indus Publications. https://books.google.com/books?id=cW_jAAAAMAAJ&q=Ali+Murad+Mound. 
  3. Wheeler, Mortimer (1968-09-02) (in en). The Indus Civilization. CUP Archive. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521069588. https://archive.org/details/induscivilizatio0003whee. "Ali Murad mound." 
  4. (in en) Memoirs of the Archaeological Survey of India. Director General, Archaeological Survey of India.. 1934. https://books.google.com/books?id=Qkpzdnix-Q4C&q=Ali+Murad+Mound. 
  5. Wheeler, Mortimer (1968-09-02) (in en). The Indus Civilization. CUP Archive. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521069588. https://archive.org/details/induscivilizatio0003whee. "Ali Murad mound." 
  6. Shendge, Malati J. (June 2003) (in en). The Civilized Demons: The Harappans in Rigveda. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170170648. https://books.google.com/books?id=Xb60zOx1_WUC&dq=Ali+Murad+Mound&pg=PA216. 
  7. Wheeler, Mortimer (1968-09-02) (in en). The Indus Civilization. CUP Archive. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521069588. https://archive.org/details/induscivilizatio0003whee. "Ali Murad mound." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_முராத்து_மேடு&oldid=3414269" இருந்து மீள்விக்கப்பட்டது