அலி இமாம்
அலி இமாம் | |
---|---|
2018 ஆம் ஆண்டு டாக்காவில் அலி இமாம் | |
பிறப்பு | 31 திசம்பர் 1950 பிரம்மன்பரியா மாவட்டம், வங்காளதேசம் |
தேசியம் | வங்காளதேசி |
பணி | எழுத்தாளர் |
அலி இமாம் (Ali imam) வங்காளதேச நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். ஒளி ஒலிசார் காட்சி அமைப்பாளராகவும் செயற்பட்டார். பல அறிவியல் கதைகளையும் , குழந்தைகளுக்கான பயணக் கதைகளையும் எழுதியுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறார் இலக்கியத்தில் இவருக்கு வங்காளதேச அகாடமியின் இலக்கிய விருது வழங்கப்பட்டது. [1]
குழந்தைப் பருவம்[தொகு]
அலி இமாம் பிராமணபரியாவில் பிறந்தார். பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவரது முழு குடும்பமும் டாக்காவிற்கு மாறியது. தனது குழந்தைப் பருவத்தை பழைய டாக்காவின் லிங்கன் சாலையின் தட்டாரிபசாரில் உள்ள நவாப்பூரில் கழித்தார்.
வேலை[தொகு]
இமாம் 630 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 40 புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். குழந்தை உளவியல், மனிதநேயம் மற்றும் சாகசம் ஆகியவை இவரது எழுத்தில் காணப்படுகின்றன.
இமாம் வங்காளதேச தொலைக்காட்சியின் பொது மேலாளராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ পুরস্কারপ্রাপ্তদের তালিকা [Winners list] (Bengali). Bangla Academy. 1 ஆகஸ்ட் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
புற இணைப்புகள்[தொகு]