அலி அய் லிகாங்
அலி அய் லிகாங் | |
---|---|
![]() திருவிழாவின் போது மிசிங் பழங்குடியினப் பெண்களின் நடனம் | |
தொடக்கம் | 'கிமூர் போலோ'வின் முதல் புதன்கிழமை |
காலப்பகுதி | வருடாந்திர விழா |
அமைவிடம்(கள்) | அசாம் , அருணாசலப் பிரதேசம், இந்தியா |
வருகைப்பதிவு | அலி- அய்- லிகாங் |
மிசிங் மக்கள் |
அலி-அய்-லிகாங் (Ali-Aye-Ligang) என்பது விவசாயத்துடன் தொடர்புடைய ஒரு வசந்த பண்டிகையாகும். குறிப்பாக நெல் சாகுபடியின் தொடக்கத்துடன் இது கொண்டாடப்படுகிறது. [1] இது இந்தியாவின் அசாமின் மைசிங் அல்லது மிசிங் [2]g/ என்ற பழங்குடியினத்தவரால் கொண்டாடப்படுகிறது. இது, வேர்கள் அல்லது விதைகளை விதைப்பது அல்லது நடவு செய்வதைக் குறிக்கிறது. திருவிழாவின் பெயர் 'அலி' என்பது விதைப்பது எனவும், 'அய்' என்பது பருப்பு வகைகள் எனவும், 'லிகாங்' என்பது விதை என்பதையும் மூன்று சொற்களால் ஆனது. [3] [4] பயிர் செயலிழப்பைத் தவிர்ப்பது, சமூகத்தின் பொது நல்வாழ்வை உறுதி செய்வது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக கிராம சமூகத்தால் அவ்வப்போது இது நடத்தப்படுகிறது.
திருவிழா நடக்கும் காலம்[தொகு]
திருவிழா 'கிமூர் போலோ'வின் முதல் புதன்கிழமை' லிகங்கே லாங்கே'யில் தொடங்குகிறது. இது கிரெகொரியன் நாட்காட்டியில் பிப்ரவரியிலும், [5] [6] அசாமி நாட்காட்டியின் பாகுன் மாதத்தின் புதன்கிழமையிலும், ஆங்கில நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்திலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். 2016இல் திருவிழா பிப்ரவரி 2இல் தொடங்கியது. [7]
செயல்பாடுகள்[தொகு]
இந்த விழாவில் 'கும்ராக் சோமன்' சமூகத்தின் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். நாட்டுப்புற பாடல்களை பாடியும், மெல்லிசை இசைத்தும் நடனமாடுகிறார்கள். திருவிழாவின் முதல் நாள் நெல் விதைப்பு சடங்கு துவக்கப்படுகிறது. திருவிழா முழுவதும் உழுதல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற பல நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. [8]
விருந்து[தொகு]
'லிலென்' என்று அழைக்கப்படும் பண்டிகையின் கடைசி நாள் ஒரு பிரம்மாண்டமான சமூக விருந்துடன் அனுசரிக்கப்படுகிறது. இந்த திருவிழாவின் போது, மிசிங் பழங்குடியினர் போரோ அபோங் அல்லது நோஜின் அபோங் (வீட்டில் தயாரிக்கப்படும் அரிசி வைன்) என்ற பல்வேறு உணவுகளை பன்றி இறைச்சியுடன் தயாரிக்கின்றனர். 'பூராங் அபின்' (வேகவைத்த அரிசி) சிறப்பு இலைகளுடன் தண்ணீரில் சமைக்கப்படுகிறது. இது மிசிங் இனத்தவர் தயாரிக்கும் ஒரு சிறப்பு உணவாகும். இது இந்தத் திருவிழாவின் போது மட்டுமே சமைக்கப்படுகிறது.
நடன வடிவங்களும் பாடல்களும்[தொகு]
இந்த விழாவில் கும்ராக் என்று அழைக்கப்படும் இளம் மைசிங் மக்களால் பிரபலமான நடனம் நிகழ்த்தப்படுகிறது. திருவிழாவின் முறையான நடனம் கிராமத்தின் கிழக்கு திசையில் இருந்து தொடங்குகிறது, இறுதியில் அது வயல் மற்றும் நதியை நோக்கி செல்கிறது. இந்த நடனம் கிராமவாசிகளின் வீட்டின் முற்றத்தை சுற்றி வந்து நிகழ்த்தப்படுகிறது.
பாடல்களும் இசையும்[தொகு]
திருவிழாவின் போது பாடல்களை இளைஞர்களால் மட்டும் பாடப்படுவதில்லை. பாடல்களின் பாடங்களும் கருப்பொருள்களும் மாறுபட்டவை. அவற்றில் ஒரு மனிதனின் வாழ்க்கை, இந்த வாழ்க்கையில் அவர் அனுபவித்த துன்பங்கள், அவரது மரணம் ஆகியவை அடங்கும். அவற்றைத் தவிர, மகிழ்ச்சி மற்றும் வலி உள்ளிட்ட தனிப்பட்ட அன்பு மற்றும் பாசத்தின் விஷயங்களை பாடல்கள் விவரிக்கின்றன. முக்கியமாக திருவிழாவின் பாடல்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அனுபவங்களின் பல்வேறு அனுபவங்களைப் பற்றி பேசுகின்றன. இந்த திருவிழாக்களுக்காக இயற்றப்பட்ட இசை துல், தால், காங் மற்றும் குங்காங் ( ககனா ) போன்ற கருவிகளைக் கொண்டுள்ளது. [9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Misings_Portrait_traditional". Themishingsassam.com. 6 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://www.allaboutmising.or[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ali-ai-Ligang being celebrated in Assam". Zeenews.india.com. 2011-02-16. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Festivals of Mishing Tribes of Assam". Vedanti.com. 2011-01-20. 5 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Today is Ali Aye Ligang Festival for Misings in Assam". Northeastblog.in. 2011-02-16. 2018-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Welcome to Assam Tourism Official website of Deptt. of Tourism, Assam, India". Assamtourism.org. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Archived copy". 8 November 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 February 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "Ali-aye-Ligang being celebrated in Assam - Oneindia News". News.oneindia.in. 2011-02-16. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ali- ai- Ligang: The Festival of the Mishings". Informationkhazana.com. 30 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-10 அன்று பார்க்கப்பட்டது.