அலி அமிரி (வரலாற்றாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அலி அமிரி (பி.1857 தியார்பாகிர் - இ 1923 இஸ்தான்புல்)  ஒரு ஒட்டோமான் வரலாற்றாசிரியாராக இருந்தார். இவர் ஒரு நிதி அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் இவர் அரபு மற்றும் துருக்கி மொழிகளில் கல்வெட்டுகளை எழுதியுள்ளார். தான் வாழ்ந்த பகுதியின் வரலாறு மற்றும் பழைய நூல்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.பெரு முயற்சிகளின் மூலமாக இவர் அரிதான மற்றும் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளுக்காக நூலகம் ஒன்றை கட்டினார். இந்த பிரதிகள் இஸ்தான்புலின் நூலகத்தை அதிகரித்தன.[1]

இவர் பல்வேறு வரலாற்றுச் சமூகங்களில் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் நூல் வெளியிட்டாளராகவும், நூலாசிரியராகவும் பணியாற்றியவர். இவர் ஓர் ஆசிரியராக அறியப்பட்டாலும் வரலாறு மற்றும் இலக்கிய படைப்புகளை எழுதினார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Ali Amiri, R. Mantran, The Encyclopaedia of Islam, Vol.