உள்ளடக்கத்துக்குச் செல்

அலிரெசா பிரூஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

அலிரெசா பிரூஜா
2018இல் பிரூஜா
நாடுபிரான்சு (ஜூலை 2021–[1][2])
பிடே (திசம்பர் 2019–ஜூலை 2021)
ஈரான் (நவம்பர் 2019 வரை [3])
பிறப்பு18 June 2003 (2003-06-18) (வயது 20)
பபோல், மாசாந்தரான்_மாகாணம், ஈரான்
பட்டம் கிராண்ட்மாஸ்டர் (2018)
பிடே தரவுகோள்2804 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2770 (நவம்பர் 2021)
தரவரிசைஇல. 2 (திசம்பர் 2021)

அலிரெசா பிரூஜா ( பாரசீக மொழி: علی‌رضا فیروزجا‎, பாரசீக உச்சரிப்பு: [æliːɾezɑː fiːɾuːzˈdʒɑː]; பிறப்பு 18 ஜூன் 2003) ஈரானில் பிறந்த ஒரு பிரெஞ்சு சதுரங்க வீரர் ஆவார் . அவர் தனது 12 வயதில் ஈரானிய சதுரங்க வாகையாளர் போட்டியை வென்றார் மற்றும் 14 வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். மேலும் 16 ஆண்டுகள் மற்றும் 1 மாத வயதில் 2700 ஈலோ மதிப்பீட்டை பெற்றார். மேலும் வெய் யீவிற்குப் பிறகு இவ்விலக்கை எட்டிய இரண்டாவது மிக இளைய வீரர் இவர் ஆவார். ஜூன் 2021 இல் அவரது பதினெட்டாவது பிறந்தநாளில் அவர் 2759 ஈலோ மதிப்பீட்டைப் பெற்றார் மற்றும் உலகத் தரவரிசையில் 13வது இடத்தைப் பிடித்தார். நவம்பர் 2021 இல், அவர் பிடே கிராண்ட் சுவிஸ் போட்டியை வென்றார்,இதன்மூலம் அவர் சதுரங்க வேட்பாளர்கள் போட்டி 2022 க்கு தகுதி பெற்றார்.

ஈரானிய அரசு, ஈரானியர்கள் இஸ்ரேலியர்களுக்கு எதிராக விளையாடவதை தடை செய்யும் நோக்கில், 2019 உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வாகையாளர் போட்டிகளில் இருந்து தனது வீரர்களை விலக்கியது. இதனால் டிசம்பர் 2019 இல், இனி ஈரானியக் கொடியின் கீழ் விளையாட மாட்டேன் என பிரூஜா அறிவித்தார். 2019 முதல், அவர் பிரான்சில் வசித்து வருகிறார். மேலும் 2021 முதல், பிரெஞ்சு கொடியின் கீழ் விளையாடி வருகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரூஜா 18 ஜூன், 2003 அன்று பாபோல், ஈரானில் பிறந்தார். [4] எட்டாவது வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். [5] 2019 இல், பிரூஜாவும் அவரது குடும்பத்தினரும் ஈரானை விட்டு வெளியேறி பிரான்சுக்கு குடிபெயர்ந்தனர். [6] [3] அவர் பிரெஞ்சு குடியுரிமைக்கு விண்ணப்பித்து ஜூலை 2021 இல் குடியுரிமை பெற்றார். [1] [2]

  1. 1.0 1.1 "Alireza Firouzja est désormais français !". echecs.asso.fr/. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
  2. 2.0 2.1 McGourty, Colin. "Alireza Firouzja is now the French no. 1". chess24.com. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
  3. 3.0 3.1 "Chess: Iran's Alireza Firouzja, 16, bypasses ban on playing Israelis". The Guardian.
  4. Cmiel, Thorsten (12 June 2018). "Im Fokus: Alireza Firouzja" (in German). ChessBase.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Shah, Sagar (9 September 2018). "The story of Alireza Firouzja narrated by his father". ChessBase India. Shah: So he started playing chess at eight? Hamidreza: Yes, yes.
  6. Iranian teen shocks chess grandmaster Magnus Carlsen to win $14,000 prize, CNN, 17 April 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிரெசா_பிரூஜா&oldid=3316077" இலிருந்து மீள்விக்கப்பட்டது