அலிமா யாகோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Halimah Yacob
حليمة بنت يعقوب
哈莉玛·雅各布
ஹலிமா பின்தி யாகொப்
Halimah Yacob APEC Women and the Economy Forum 2012.jpg
சிங்கப்பூரின் 8 ஆவது குடியரசுத்தலைவர்
பிரதமர் லீ சியென் லுாங்
முன்னவர் ஜே. ஒய். பிள்ளாய் (Acting)
சிங்கப்பூர் பாராளுமன்றத்தின் 9 ஆவது சபாநாயகர்
துணை சார்லசு சோங்
லிம் பியாவ் சுவான்
முன்னவர் மைக்கேல் பால்மர்
பின்வந்தவர் டான் சுவான்-ஜின்
தனிநபர் தகவல்
பிறப்பு 23 ஆகத்து 1954 (1954-08-23) (அகவை 65)
சிங்கப்பூர்
அரசியல் கட்சி மக்கள் செயல் கட்சி (2001–2017)
சுயேச்சை வேட்பாளர் (2017–present)
வாழ்க்கை துணைவர்(கள்) முகம்மது அப்துல்லா அல்ஹப்சி
பிள்ளைகள் 5

அலிமா பிந்தி யாகோப்பு (Halimah binti Yacob) (Jawi: حاليمه بنت ياچوب; பிறப்பு 23 ஆகத்து 1954) ஒரு சிங்கப்பூர் அரசியல்வாதியும்[1] தற்போதைய சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும் ஆவார். இவர், முன்னதாக,  நாட்டை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரும் ஆவார்.  இவர் சனவரி 2013 முதல் ஆகத்து 2017 வரை ஒன்பதாவது பாராளுமன்றத்தின்  சபாநாயகரும் ஆவார்.[2] 2001 முதல்  2015 ஆம் ஆண்டு வரை ஜுராங் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி சார்பான பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் 2017 வரை மார்சிலிங்-ஈவ் டீ சமூக பிரதிநிதித்துவ பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 2017 ஆம் ஆண்டு ஆகத்து 7 அன்று, அவர் தனது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்தும் மற்றும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர் என்பதிலிருந்தும் பதவி விலகினார்.

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்று சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. 2017 செப்டம்பர் 13 ஆம் நாள், குடியரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்த வேறு நபர்கள் யாரும் தகுதியுைடயவர்களாக இல்லாத காரணத்தால், யாகோப்பு போட்டியில்லாத எளிதான வெற்றியின் மூலம் குடியரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.[3][4] 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார்.[5] இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் வரலாற்றில் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் ஆகியுள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிமா_யாகோப்பு&oldid=2718912" இருந்து மீள்விக்கப்பட்டது