அலிபாக் வெள்ளை வெங்காயம்
| Alibag White onion (अलिबाग पांढरा कांदा) | |
|---|---|
| வேறு பெயர்கள் | அலிபாக் பந்தாரா காண்டா |
| குறிப்பு | அலிபாக் வெள்ளை வெங்காயம், மகாராஷ்டிரா மாநிலத்தில் விளையும் ஒரு வெள்ளை வெங்காய வகை |
| வகை | வெங்காயம் |
| இடம் | அலிபாக் |
| நாடு | இந்தியா |
| பதிவுசெய்யப்பட்டது | 16 நவம்பர் 2022 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindia.gov.in |
அலிபாக் வெள்ளை வெங்காயம் (Alibag White onion) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் வளர்க்கப்படும் ஒரு பாரம்பரிய வெள்ளை வெங்காய வகையாகும். இது ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் வட்டத்தில் பொதுவாகவும் பரவலாகவும் பயிரிடப்படும் ஒரு பயிராகும்.[1] இந்த வெங்காயம் அதன் இனிப்பு, குறைந்த காரத்தன்மை, அதிக ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது பாரம்பரியமாக அலிபாக்கில், குறிப்பாக கார்லே, கண்டாலா, நெவுலி, தல்வாலி, சாகோன், வாட்கான் போன்ற கிராமங்களில் பயிரிடப்படுகிறது. இது 1883-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அங்கீகரிக்கப்பட்டு, அதன் மருத்துவ குணங்களுக்காகவும், இதய நோய்களுக்குச் சிகிச்சையளித்தல், கொழுப்பைக் கட்டுப்படுத்துதல், கணையநீரை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட இதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அறியப்படுகிறது.[2][3]
இந்திய புவிசார் குறியீட்டின் கீழ், இது "அலிபாக் வெள்ளை வெங்காயம்" என்று குறிப்பிடப்படுகிறது.[4]
பெயர்
[தொகு]அலிபாக் வெள்ளை வெங்காயம் என்பது அலிபாக்கில் ஒரு மதிப்புமிக்க, பூர்வீகக் காய்கறி பயிராகும், எனவே இடத்தின் பெயரால் இது பெயரிடப்பட்டது.
உள்ளூர் பெயர்
[தொகு]அலிபாக் வெள்ளை வெங்காயம் உள்ளூரில் "அலிபாக் பந்தாரா காண்டா" (अलिबाग पांढरा कांदा) என்று அழைக்கப்படுகிறது. "பந்தாரா" என்ற சொல் வெள்ளை நிறத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில் "காண்டா" என்பது உள்ளூர் மாநில மொழியான மராத்தியில் வெங்காயத்தைக் குறிக்கிறது.[5]
விளக்கம்
[தொகு]அலிபாக் வெள்ளை வெங்காயத்தின் பண்புகள் பட்டியல்:[6]
சாகுபடி மற்றும் அறுவடை
[தொகு]- அலிபாக் வெள்ளை வெங்காயம் பாரம்பரிய விவசாய முறைகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது. வெங்காயத்தின் தூய தன்மை இதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது. நெல் அறுவடைக்குப் பிறகு, வயலில் மீதமுள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. உள்ளூர்வாசிகள் அனுபவம் மற்றும் சேகரித்த அறிவு மூலம் காலப்போக்கில் விவசாயம் மற்றும் சேமிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி வெங்காயச் சாகுபடி செய்கின்றனர்.
தனித்துவமான பண்புகள்
[தொகு]- இனிப்புச் சுவை, குறைந்த காரத்தன்மை
- குறைந்த பைருவிக் அமில உள்ளடக்கம்[7]
- குறைந்த சல்பர் உள்ளடக்கம்
- அதிகப் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து
- வெங்காய ஜடை (வேணி) தயாரிக்கும் தனித்துவமான முறை.
சேமிப்பு மற்றும் அடுக்கு வாழ்க்கை
[தொகு]- அலிபாக் வெள்ளை வெங்காய வேணி (ஜடை) கிராமப்புறப் பெண்களால் தயாரிக்கப்படுகிறது. இவர்கள் வெங்காய மேல் தோல் பகுதிகளை ஜடைகளாக நெய்து, பின்னர் இணையாக இணைத்து 3–4 என விற்கின்றனர். இவை ஒரு வருடம் வரை சேமித்து வைக்கக்கூடியது.
புவிசார் குறியீடு
[தொகு]அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு 16 நவம்பர் 2022 அன்று இந்திய அரசு புவிசார் குறியீடு பதிவேட்டில் பதிவு செய்து புவியியல் குறியீடு தகுதி வழங்கியது.[4]
அலிபாக் பண்டார கண்ட ஷேட்காரி உட்பதக் காட், அலிபாக் வெள்ளை வெங்காயத்தின் புவிசார் குறியீடு பதிவை முன்மொழிந்தார். சனவரி 2020-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, வெங்காயத்திற்கு சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் 2022-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "அலிபாக் வெள்ளை வெங்காயம்" என்ற பெயர் இப்பகுதியில் விளையும் வெங்காயத்திற்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. இதனால் இது லசல்கான் வெங்காயத்திற்குப் பிறகு மகாராட்டிராவிலிலிருந்து புவிசார் குறியீடு பெறும் இரண்டாவது வெங்காய வகையாகவும், புவிசார் குறியீடு பெற்ற மகாராட்டிரப் பொருட்களில் 34ஆவது வகைப் பொருளாகவும் மாறியது.
புவிசார் குறியீடு, வெங்காயத்தைச் சட்டவிரோத விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Naik, A. V.; Kshirsagar, P. J.; Manerikar, S. S.; Gb, Aiswarya; Chavan, R. A.; Malave, D. B. (2023). "Economic analysis of white onion in Raigad district of Maharashtra" (in en). The Pharma Innovation Journal 12 (1): 1585–1589. பன்னாட்டுத் தர தொடர் எண்:2277-7695. https://www.thepharmajournal.com/archives/?year=2023&vol=12&issue=1&ArticleId=18191. பார்த்த நாள்: 7 December 2024.
- ↑ Borse, D. K.; Patil, K. D.; Chavan, L. S.; Khade, V. N. (2015). "Effects of Fertilizer Levels and Weed Control Measures on Growth and Yield of White Onion (Allium cepa) under North Konkan Coastal Zone of Maharashtra". Journal of the Indian Society of Coastal Agricultural Research (in ஆங்கிலம்). pp. 19–23. Retrieved 7 December 2024.
- ↑ Vidyapeeth, Mahatma Phule Krishi (1971). The Research Journal of Mahatma Phule Agricultural University (in ஆங்கிலம்). Mahatma Phule Krishi Vidyapeeth. Retrieved 7 December 2024.
- 1 2 "Alibag White onion". Intellectual Property India. Retrieved 24 November 2024.
- ↑ "उन्हाळा असो वा पावसाळा! वाचा पांढरा कांदा खाण्याचे आरोग्यदायी फायदे" (in mr). Zee 24 taas. 28 June 2023. https://zeenews.india.com/marathi/health/white-onion-benefits-in-rainy-season-in-marathi/724571.
- ↑ "Alibag White onion". Intellectual Property India. Retrieved 5 December 2024.
- ↑ "Maharashtra: Alibaug white onion gets GI tag for health benefits". The Times of India. 3 October 2021. https://timesofindia.indiatimes.com/city/navi-mumbai/alibaug-white-onion-gets-gi-tag-for-health-benefits/articleshow/86718322.cms.