உள்ளடக்கத்துக்குச் செல்

அலிபாக்

ஆள்கூறுகள்: 18°38′N 72°53′E / 18.64°N 72.88°E / 18.64; 72.88
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிபாக்
அலிபாக் கடற்கரை
அலிபாக் கடற்கரை
அலிபாக் is located in மகாராட்டிரம்
அலிபாக்
அலிபாக்
மகாராட்டிரம் மாநிலத்தில் அலிபாக் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°38′N 72°53′E / 18.64°N 72.88°E / 18.64; 72.88
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ராய்கட் மாவட்டம்
வருவாய் வட்டம்அலிபாக் தாலுகா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்அலிபாக் நகராட்சி மன்றம்
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20,743
மொழிகள்
 • வட்டார மொழிமகாராஷ்டிரி கொங்கனி
 • அலுவல் மொழிமராத்திய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
402 201
இடக் குறியீடு02141
1896ல் அலிபாக்
கனோஜி ஆங்கரேவின் சமாதி

அலிபாக் (Alibag), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது தெற்கு மும்பைக்கு தெற்கே 90 கிலோ மீட்டர் தொலைவிலும், புனேவிலிருந்து 143 கிலோ மீட்டர் தொலைவிலும்; கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ளது. மேலும் இந்நகரம் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ளது. இந்நகரத்தில் பத்மாட்சி ரேணுகா அம்மன் கோயில் உள்ளது.

வரலாறு

[தொகு]

மராத்தியப் பேரரசின் கடற்படை தளபதி கனோஜி ஆங்கரேயால் 17ஆம் நூற்றாண்டில் கொங்கண் பிரதேசத்தில், அரபுக் கடற்கரையில் அலிபாக் நகரத்தை நிறுவினார்.[1] அலிபாக் நகரத்தைச் சுற்றிய பகுதிகளில் பெனே இசுரேல் யூதர்கள் அதிகம் வாழ்ந்தனர்.[2][3][4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும், 4,985 குடியிருப்புகளும் கொண்ட அலிபாக் நகரத்தின் மக்கள் தொகை 20,743 ஆகும். அதில் 10,646 ஆண்கள் மற்றும் 10,097 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 948. பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.2% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,192 மற்றும் 2,735 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 82.55%, இசுலாமியர் 11.06%, சமணர்கள் 2.42%, பௌத்தர்கள் 3.19%, கிறித்தவர்கள் 0.44% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர்.[5]

போக்குவரத்து

[தொகு]

இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பென் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.[6]

நெடுஞ்சாலைகள்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 166ஏ அலிபாக் நகரம் வழியாகச் செல்கிறது.[7]

படகு சேவைகள்

[தொகு]

அலிபாக் நகரம் அருகில் உள்ள மந்துவா பகுதியிலிருந்து கடல் வழியாக மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் செல்வதற்குப் படகுகள் உள்ளன.[8]

மந்துவா கடற்கரை கிராமத்திலிருந்து, மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயிலுக்கு செல்வதற்கான படகு சேவைகள்

சுற்றுலாத்தலங்கள்

[தொகு]

தட்ப வெப்பம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of Alibag". alibagonline (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
  2. Devidayal, Namita (15 May 2016). "Alibaug's secret: A legendary drink with a Jewish connect". Times of India. https://timesofindia.indiatimes.com/city/mumbai/alibaugs-secret-a-legendary-drink-with-a-jewish-connect/articleshow/52274241.cms. 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bene என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Pinglay-Plumber, Prachi (27 October 2022). "Abraham's Footsteps". Outlook India. https://www.outlookindia.com/magazine/story/abrahams-footsteps/291928. 
  5. "Alibag Population, Caste Data Raigarh Maharashtra - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-04-22.
  6. "Pen, India", Wikipedia (in ஆங்கிலம்), 2025-03-25, retrieved 2025-04-22
  7. "National Highway 166A (India)", Wikipedia (in ஆங்கிலம்), 2025-02-27, retrieved 2025-04-22
  8. "Mumbai To Alibaug Ferry - Time, Prices & Tickets - WeekendFeels" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-07. Retrieved 2025-01-16.
  9. "Kolaba Fort", Wikipedia (in ஆங்கிலம்), 2025-02-11, retrieved 2025-04-22
  10. "Station: Alibagh Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 25–26. Archived from the original (PDF) on 5 February 2020. Retrieved 30 March 2020.
  11. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M136. Archived from the original (PDF) on 5 February 2020. Retrieved 30 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாக்&oldid=4259217" இலிருந்து மீள்விக்கப்பட்டது