அலிங்கர் ஆறு

ஆள்கூறுகள்: 34°36′N 70°04′E / 34.600°N 70.067°E / 34.600; 70.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிங்கர் ஆற்றில் தற்காலிக பாலத்தை கடக்கும் சிப்பாய்

அலிங்கர் ஆறு (Alingar River) கிழக்கு ஆப்கானித்தானின் லக்மான் மாகாணத்தில் பாயும் ஓர் ஆறாகும்.

சிந்து நதிப் படுகையின் ஒரு பகுதியான காபூல் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் இதுவும் ஒன்றாகும். இது இரண்டு ஆதாரங்களைக் கொண்டுள்ளது, ராம்கெல் மற்றும் குலேம் ஆறுகள் அலிங்கர் ஆறுக்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.[1]

அலிங்கர் மாவட்டம் மற்றும் அலிங்கர் பள்ளத்தாக்கு ஆகியவற்றுக்கான பெயரையும் இந்த ஆறு வழங்குகிறது. மிகுத்தர்லாம் மாவட்டத்தில் உள்ள மிகுதர்லாம் நகரம் வழியாகவும் அலிங்கர் ஆறு பாய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிங்கர்_ஆறு&oldid=3746268" இலிருந்து மீள்விக்கப்பட்டது