அலாங் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலாங் கோட்டை
Alang Fort
நாசிக் மாவட்டம், மகராட்டிரம் in இந்தியா
Alang Traverse 1.jpg
அலாங் கோட்டை
அலாங் கோட்டை Alang Fort is located in மகாராட்டிரம்
அலாங் கோட்டை Alang Fort
அலாங் கோட்டை
Alang Fort
மகராட்டிராவில்
ஆள்கூறுகள் 19°34′58″N 73°39′40″E / 19.5827°N 73.6612°E / 19.5827; 73.6612
வகை மலைக் கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை மோசம்[சான்று தேவை]
இட வரலாறு
கட்டிய காலம் மராத்தா பேரரசு
கட்டிடப்
பொருள்
கல், ஈயம்
உயரம் 4,500 அடிகள் (1,400 m)

அலாங் கோட்டை (Alang Fort) அல்லது ஆலங்காட் அல்லது ஆலாங் கோட்டை என்று அழைக்கப்படுவது மேற்குத் தொடர்ச்சி மலையில், மகாராட்டிராவின் நாசிக், கல்சுபாய் வரம்பில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். அலாங் கோட்டை, மடங்காட் கோட்டை, குலாங் கோட்டை மற்றும் இவற்றை இணைக்கும் மலையேற்றப் பாதை அலங், மதன் மற்றும் குலாங் (ஏ.எம்.கே) என அழைக்கப்படுகிறது. அலாங் கோட்டையினைச் சென்றடைவது மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மகாராட்டிரா கலாச்சார அரசாங்க வலைத்தளம்,[1] "அலாங்-மதன்-குர்லாந்து மகாராஷ்டிராவின் மிகவும் சவாலான மலையேற்றங்களில் ஒன்றாகும்” எனக் குறிப்பிடுகிறது. குறிப்பாக வழிநெடுகிலும் உள்ள நீரோடைகள் மற்றும் அடர்ந்த காடுகள் சவாலான பயண அனுபவத்தினைத் தருகின்றது.[2] அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்களுக்கு இந்த பாதை பொருத்தமானது. இப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் கரடுமுரடான பாதைகள் காரணமாகக் கோட்டைகளை அணுகுவது கடினம் என்றாலும்,[3] இவை பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கின்றன.

இந்த கோட்டை இயற்கையாக அமைந்த இந்த பீடபூமியில் அமைந்துள்ளது. கோட்டையின் உள்ளே இரண்டு குகைகள், ஒரு சிறிய கோயில், மற்றும் 11 மலை நீர்த் தொட்டிகள் உள்ளன. இரண்டு குகைகளிலும் 40 பேர் வரை தங்கலாம். வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களின் எச்சங்கள் கோட்டை முழுவதும் பரவியுள்ளன. கோட்டையின் கிழக்கே கலசுபாய், ஆந்த் கோட்டை, பட்டா மற்றும் பிதாங்காட் உள்ளன. வடக்கு பகுதியில் ஹரிகர், திரையம்பாக்காட்டும் அஞ்சனேரியும் மற்றும் தெற்கு, அரிசுசந்திரகாட்டும், ஆஜாபோககாட்டும், குட்டாவும், இரட்டான்காட்டும் உள்ளன.

இது நகரத்திலிருந்து தொலைவில் உள்ளதால், மலையேற்றத்தின் அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்கள் கூட தங்கள் பயணத்தின் முழுமையிலும் போதுமான அளவு உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அணுகல்[தொகு]

அலாங்கிற்கு செல்ல அம்பேவாடி கிராமம் வழியாகச் செல்லலாம் . கசார அல்லது இக்காடாபுரியினை தொடருந்து அல்லது பேருந்து மூலம் சென்றடையலாம். கோடியிலிருந்து காலை 07.30 மணிக்குப் புறப்படும் பேருந்து சேவை ஒன்றும் உள்ளது. இந்த பேருந்து 32 கிலோமீட்டர்கள் (20 mi), தொலைவில் உள்ள அம்பேவாடியினை மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சென்றடைகிறது. அம்பேவாடியிலிருந்து, அலாலங், மதன் மற்றும் குலாங் ஆகிய கோட்டைகளைக் காணலாம். இந்த பேருந்து அலாங் மற்றும் மதன் இடையேயான கோட்டையைக் காணும் இடம் வரை பயணிக்கிறது. இப்பகுதியின் இடதுபுறம் அலாங்கும் வலதுபுறம் மதனும் உள்ளது.[4]

அலாங் கோட்டையினை காட்காரிலிருந்து பண்டர்தாரா வழியிலும் அணுகலாம். இதற்கு 212 மணி நேரம் பயணம் ஆகும். உதத்வடேவிலிருந்து பண்டர்தாரா வழியாக மூன்றாவது குகையை அடையலாம். மற்றொரு வழி உதத்வதே காவ்னைச் பண்டர்தரா வழியாக அடையலாம். இது பீடபூமிக்குச் சென்றடைந்து அங்கிருந்து இரண்டாவது பாதையுடன் இணைகிறது.[5]

கேலரி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cultural Maharashtra Government Website".
  2. "AMK - Alang Madan Kulang Trek - The Toughest Trek In Maharashtra". Indiahikes (ஆங்கிலம்). 2021-02-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Five great winter treks". mint (ஆங்கிலம்). 2021-02-23 அன்று பார்க்கப்பட்டது.
  4. Dey, Panchali. "Trek to Arnala Fort, where views of Arabian Sea welcome you with open arms". Times of India Travel. 2021-02-07 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Bhandardara Hill Station near Nashik - One Day Trip in Monsoon". Sanjeev Mishra (ஆங்கிலம்). 2016-07-11. 2021-02-09 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாங்_கோட்டை&oldid=3179860" இருந்து மீள்விக்கப்பட்டது