உள்ளடக்கத்துக்குச் செல்

அலாகிரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலாகிரைட் (Alacrite) கோபால்ட் தனிமத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கலப்புலோகமாகும். எல்-605, கோபால்ட் எல்-605, எயின்சு 25 மற்றும் எப்போதாவது எப் 90[1][2][3]) என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆக்சிசனேற்றம், சல்பைடேற்றம் போன்ற அரித்தல் செயல்முறைகளுக்கு எதிராகவும், இயந்திரவியல் பயன்களைக் கொண்டதாகவும் இக்கலப்புலோகம் உபயோகப்படுகிறது[2].

காந்தப்பண்பில்லாதது, எஃகுத்தன்மை மிக்க ஒரு மிகைக் கலப்புலோகம் என இக்குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினரான XSH அலாகிரைட் விவரிக்கப்படுகிறது[4]. துருப்பிடிக்காத இதன் உயர் மேற்பரப்புக் கடினத்தன்மை கண்ணாடித் தன்மையான மெருகிடலாக கருதப்படுகிறது[5]. விமானத்தின் பாகங்கள் தயாரிப்பதற்கான கலப்புலோகமாக இது உருவாக்கப்பட்டது[6]. விண்வெளி வாகனங்களின் பகுதிப் பொருட்கள், சுழலிப் பொறிகளின் பாகங்கள் போன்ற பயன்பாடுகளை எல்-605 கலப்புலோகம் கொண்டுள்ளது. தவிர உயிர்ப்பொருத்தம் காரணமாக மருந்து இழுவை போன்ற விரிதன்மை குழல்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பிரான்சு நாட்டில் இக்கலப்புலோகம் தரப்படுத்தப்பட்ட கிலோகிராம் நிறையாகப் பயன்படுகிறது.

இயைபும் தரப்படுத்தலும் ==

கோபால்ட் (Co), உடன் குரோமியம்]] (Cr), தங்குதன் (W), நிக்கல் (Ni), இரும்பு (Fe), கார்பன் (C) ஆகியன்வற்றின் திட்டமிட்ட கலவையும், மாங்கனீசு (Mn), சிலிக்கன் (Si), பாசுபரசு (P) போன்ற தனிமங்கள் சிறிதளவிலும் சேர்க்கப்படு அலாகிரைட் தயாரிக்கப்படுகிறது.

தங்குதனும் நிக்கலும் இக்கலப்புலோகத்தின் இயந்திரவினைமையை[3] மேம்படுத்துகின்றன. திடப்பொருள் கரைசலின் வலினையை அதிகரிப்பதற்கு குரோமியம் [2] பயன்படுகிறது. எல்-605 கலப்புலோகத்தின் பொறுத்தமைவுப் பண்புகள் இங்கு தரப்பட்டுள்ளன:[1][2][4][6]

எல்-605 கலப்புலோகத்தின் இயபு பொறுத்தம்.
Co Cr W Ni Fe C Mn Si P
எஞ்சியிருபது 19–21 14–16 9–11 < 3 0.05–0.015 1–2 < 1 < 0.4

உட்பொருத்து மருத்துவக் கருவிகளான ஏ.எசு.டி.எம் எப்90-09, சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன 5832-5:2005 போன்றவை எல்-605 இன் தயாரிப்பு பற்றியும் சோதனை பற்றியும் எடுத்துரைக்கின்றன[2][3][7][8] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Nickel Alloy L-605, Cobalt® L-605, Haynes® 25". Continental Steel & Tube Company. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Poncin, P.; Gruez, B.; Missillier, P.; Comte-Gaz, P.; Proft, J.L. (2006). "L605 Precipitates and Their Effects on Stent Applications". In Venugopalan, R.; Wu, M. (eds.). Medical Device Materials III - Proceedings of the Materials & Processes for Medical Devices Conference. ASTM International. pp. 85–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781615031153. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  3. 3.0 3.1 3.2 Brunski, J.B. (2009). "3.2.9 Metals". In Academic Press (ed.). Biomedical Engineering Desk Reference. Elsevier. pp. 230–247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123746474. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  4. 4.0 4.1 Meury, P.A.; Molins, R.; Gosset, A. (June 2005). "Définition d'un nouvel alliage métallique pour la réalisation d'étalons de masse secondaires" (PDF). Actes du 12e congrès international de métrologie. Laboratoire national de métrologie et d’essais. Archived from the original (PDF) on 8 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "BNM-INM/CNAM - M.G.A." L'Institut National de Métrologie. Archived from the original on 30 March 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  6. 6.0 6.1 Jones, F.E.; Schoonover, R.M. (2002). "Chapter 3: Contamination of Mass Standards". Handbook of Mass Measurement. CRC Press. pp. 23–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420038453. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  7. "ASTM F90-09: Standard Specification for Wrought Cobalt-20Chromium-15Tungsten-10Nickel Alloy for Surgical Implant Applications (UNS R30605)". ASTM.org. ASTM International. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016.
  8. "ISO 5832-5:2005: Implants for surgery -- Metallic materials -- Part 5: Wrought cobalt-chromium-tungsten-nickel alloy". ISO.org. International Organization for Standardization. 11 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாகிரைட்&oldid=3927254" இலிருந்து மீள்விக்கப்பட்டது