அலவைது மக்கள்
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை | |
---|---|
ஏறத்தாழ 4 மில்லியன்[1] | |
நிறுவனர் | |
இப்னு நுசைர்[2] மற்றும் அல்-காசிபி[3] | |
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் | |
சிரியா | 2 முதல் 3 மில்லியன் வரை [4] |
துருக்கி | 500,000 முதல் 1 மில்லியன் வரை[5][6] |
அர்ஜென்டைனா | 180,000[7][8] |
லெபனான் | 150,000[9][10][11] |
ஜெர்மனி | 70,000[12][13] |
ஆஸ்திரேலியா | 43,000[a][14] |
இஸ்ரேல் | 2,824[15] |
மொழிகள் | |
லெவண்ட் அரபு மொழி, துருக்கிய மொழி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளின் மொழிகள் |
அலவைது மக்கள் (Alawites), சியா இசுலாமின் ஒரு உட்பிரிவின அலவைது சமயத்தை பின் பற்றும் அரபு முஸ்லிம்கள் ஆவார்.[16][17][18][19] இம்மக்கள் மேற்கு ஆசியாவில் லெவண்ட் பகுதியில், குறிப்பாக சிரியா நாட்டின் கடற்கரை மாநிலமான லடாக்கியாவில்[20] அதிகம் வாழ்கின்றனர். சன்னி இசுலாமியர்களால் துரத்தப்பட்டு, புலம்பெயர்ந்த அலவைது மக்கள் இஸ்ரேல், லெபனான், துருக்கி (கத்தே மாகாணம்), அர்ஜென்டைனா , ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றனர். இம்மக்கள் லெவண்ட் அரபு மொழி, துருக்கிய மொழி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளின் மொழிகளைப் பேசுகின்றனர்.
தோற்றம்
[தொகு]கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பகால பன்னிருவர் சியா இசுலாமின் முதல் இமாம் அலி இப்னு தாலிப்பை, அலவைது மக்கள் தெய்வீக சாரத்தின் வெளிப்பாடாக வணங்குபவர்கள்.[21][22]குரான் இவர்களது புனித நூலாகும். அலவைது மக்கள் பின்பற்றும் அலவைது சமயத்தை இப்னு நுசைர் என்பவரால் 9ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[23][24]
சொற்பிறப்பியல்
[தொகு]பழைய ஆதாரங்களில், அலவிகள் பெரும்பாலும் "அன்சாரிகள்" என்று அழைக்கப்பட்டார்கள். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அலவைதுகளிடையே வாழ்ந்த சாமுவேல் லைடின் கூற்றுப்படி, இது அவர்கள் தங்களுக்குள் பயன்படுத்திய ஒரு சொல். "அன்சாரி" என்பது "நுசைரி" என்பதன் ஒலிபெயர்ப்பில் ஒரு மேற்கத்திய பிழை என்று பிற ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அலவைட்டுகள் வரலாற்று ரீதியாக நுசைரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அவர்களின் மத நிறுவனர் இப்னு நுசைர் அல்-நுமைரிக்குப் பிறகு., "நுசைரி" என்ற சொல் 1920 களில் வழக்கற்றுப் போனது. ஏனெனில் பிரெஞ்சு ஆணை காலத்தில் சமூகத்திற்குள் உள்ள அறிவுஜீவிகளால் வழிநடத்தப்பட்ட ஒரு இயக்கம் அதை "அலவி" என்ற நவீன வார்த்தையுடன் மாற்ற முயன்றது. "நுசைரிகள்" என்ற சொல் இப்போது ஒரு அவதூறாகப் பயன்படுத்தப்படுகிறது.
மதச் சடங்குகள்
[தொகு]சியா இசுலாமியர்கள் அலவைது மக்களை ஒரு மர்மமான வழிபாட்டுப் பிரிவாகக் கருதுகின்றனர். ஏனெனில் அலவைது முஸ்லீம்கள் தொழுகைக்கு பாங்கு அழைப்பு விடுப்பது, மசூதிகளில் பிரார்த்தனை செய்வது, ஹஜ் யாத்திரை மேற்கொள்வது மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்ற பொதுவான இஸ்லாமிய நடைமுறைகளை நிராகரிக்கிறார்கள். அதே நேரத்தில், இவர்கள் பல கிறிஸ்தவ புனித நாட்களையும் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவ புனிதர்களை மதிக்கிறார்கள்.
இறையியல்
[தொகு]அலவைதுகளின் இறையியல் மற்றும் சடங்குகள் சியா இஸ்லாமிலிருந்து பல முக்கியமான வழிகளில் கடுமையாக வேறுபடுகிறது.. உதாரணமாக, பல்வேறு அலவைது சடங்குகள் மது அருந்துவதை உள்ளடக்கியது மற்றும் மது அருந்துவதைத் தடை செய்யவில்லை.[25] அலவைதுகளின் இறையியல் மறுபிறவி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அலியை கடவுளின் தெய்வீக அவதாரமாகக் கருதுகிறது. [26][27]மேலும், அலவைது மதகுருமார்கள் தங்கள் மதம் சியா இசுலாமிலிருந்து இறையியல் ரீதியாகவும் வேறுபட்டது என்று வலியுறுத்துகின்றது.. அலவைதுகள் வரலாற்று ரீதியாக வெளியாட்களிடம் தங்கள் நம்பிக்கைகளை இரகசியமாக வைத்திருந்தனர். 2000ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, அலவைது சமயம் குறித்த மேற்கத்திய புலமை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்தது. அலவைது சமயம் ஒரு தெய்வீக திரித்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதில் ஒரே கடவுளின் மூன்று அம்சங்கள் உள்ளது.. திரித்துவத்தின் அம்சங்கள் மனா (பொருள்), இஸ்ம் (பெயர்) மற்றும் பாப் (கதவு) ஆகும். இந்த வெளிப்பாடுகள் வரலாறு முழுவதும் மனித வடிவத்தில் ஏழு முறை சுழற்சி முறையில் மறுபிறவி எடுப்பதாக அலவைதுகளின் நம்பிக்கைகள் கூறுகிறது. அலவைட்டுகளின் கூற்றுப்படி, அலி இப்னு அபி தாலிப், முஹம்மது மற்றும் சல்மான் அல்-ஃபாரிசி ரலி ஆகியோர் திரித்துவத்தின் அவதாரங்கள் ஆவார்.
பாரம்பரிய சுன்னி இசுலாம் மற்றும் சியா இசுலாம் இறையியலாளர்களால் நம்பிக்கையற்றவர்களாகக் கருதப்படும் அலவைது மக்கள், ஒட்டோமான்கள், அப்பாசிட்கள், மம்லூக்குகள் போன்ற பல்வேறு முஸ்லிம் பேரரசுகளின் கீழ் அடிமைத்தனம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். 1920 இல் சிரியாவின் பிரெஞ்சு ஆணை நிறுவப்பட்ட போது அலவைதுகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை இந்த சமூகம் பொதுவாக "நுசைரிஸ்" என்று அடையாளம் காணப்பட்டது. பிரெஞ்சு நிர்வாகம் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் சியா இசுலாமிலிருந்து தனித்து அடையாளப்படுத்த "அலவைதுகள்" என்ற முத்திரையை பரிந்துரைத்தது. [28]பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ஆயுதப் படைகளில் ஏராளமான சிறுபான்மை அலவைதுகளை சேர்த்துக் கொண்டனர் மற்றும் அரசு உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டனர். பின்னர் சிரியாவின் அதிபர்களான அபீஸ் அல் ஆசாத் (1971–2000) மற்றும் பசார் அல்-அசத் (2000-2024) ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான அல்வைதுகளை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
சிரியாவில் அலவைதுகள் படுகொலை
[தொகு]2025ஆம் ஆண்டில் சிரியாவின் புதிய இடைக்கால அதிபராக பதவியேற்ற அபு முகமது அல்-சுலானியின் ஆட்சியில், சிரியாவின் அரசுப் படைகளால் நூற்றுக்கணக்கான அலவைது மக்கள் கொல்லப்பட்டனர்.[29]
தொடர்புடைய இனக்குழுக்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Approximately 2% of Lebanese-born people in Australia
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Politics of Sectarian Insecurity: Alawite 'Asabiyya and the Rise and Decline of the Asad Dynasty of Syria - University of Otago". www.otago.ac.nz. page 6
- ↑ "MOḤAMMAD B. NOṢAYR". Encyclopaedia Iranica. electricpulp.com.
- ↑ "ḴAṢIBI". Encyclopaedia Iranica. electricpulp.com.
- ↑ "The 'secretive sect' in charge of Syria". BBC News. 17 May 2012. Retrieved 13 April 2021.
- ↑ Cassel, Matthew. "Syria strife tests Turkish Alawites".
- ↑ Spencer, Richard (3 April 2016). "Who are the Alawites?". https://www.telegraph.co.uk/news/2016/04/02/who-are-the-alawites/.
- ↑ Montenegro, Silvia (2018). "'Alawis in Argentina: Religious and political identity in the diaspora". Contemporary Islam 12: 23–38. doi:10.1007/s11562-017-0405-7. https://link.springer.com/article/10.1007/s11562-017-0405-7.
- ↑ "Early_Muslim_immigration in Argentina", in: ‘Early_Muslim_immigration , Published: 18 December 2022
- ↑ [1] பரணிடப்பட்டது 6 ஆகத்து 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Lebanese Allawites welcome Syria's withdrawal as 'necessary'". The Daily Star. 30 April 2005. http://www.dailystar.com.lb/News/Lebanon-News/2005/Apr-30/4206-lebanese-allawites-welcome-syrias-withdrawal-as-necessary.ashx#axzz2xTGie9Fr.
- ↑ "Lebanon's Alawi: A Minority Struggles in a 'Nation' of Sects". Al Akhbar English. 8 November 2011. Archived from the original on 4 March 2016. Retrieved 6 July 2012.
- ↑ "Mitgliederzahlen: Islam", in: Religionswissenschaftlicher Medien- und Informationsdienst|Religionswissenschaftliche Medien- und Informationsdienst e. V. (Abbreviation: REMID), Retrieved 13 February 2017
- ↑ "Anzahl der Muslime in Deutschland nach Glaubensrichtung im Jahr 2015* (in 1.000)", in: Statista GmbH, Retrieved 13 February 2017
- ↑ Ghassan Hage (2002). Arab-Australians today: citizenship and belonging (Paperback ed.). Melbourne University Publishing. p. 40. ISBN 0-522-84979-2.
- ↑ UNIFIL Press Kit பரணிடப்பட்டது 14 ஆகத்து 2021 at the வந்தவழி இயந்திரம் p.6
- ↑ "Alawite". Britannica.
- ↑ Feldman, Noah (12 May 2020). The Arab Winter: A Tragedy (in ஆங்கிலம்). Princeton University Press. ISBN 978-0-691-20144-3.
- ↑ "Alawites in Lebanon". Minority Rights Group International. 16 October 2023.
- ↑ "Alawites and the Fate of Syria". Origins (in ஆங்கிலம்). The Ohio State University. 12 November 2013. Retrieved 4 May 2023.
- ↑ Latakia
- ↑ Nisan, Mordechai (2002). "6: Alawites: To Power and the Unknown". Minorities in the Middle East (2nd ed.). McFarland & Company, Inc. p. 116. ISBN 978-0-7864-1375-1.
'Alawite religious faith, that is the belief-system of the Nusairi sect, is rooted in a doctrine whose ideas reflect multiple theological and philo-sophical influences. ... Greek or gnostic conceptions of the divinity intersperse with human incarnation as a key element in its theology.
- ↑ Sources:
- Madeleine Pelner Cosman; Linda Gale Jones (2009). "The Nusayriyya Alawis". Handbook to Life in the Medieval World, 3-Volume Set. Infobase Publishing. p. 407. ISBN 978-1-4381-0907-7.
Alawi doctrine is secret, esoteric, and Gnostic in nature. They believe that Ali ibn Abi Talib is the supreme eternal God...
- Prager, Laila; Prager, Michael; Spenger, Guido, eds. (2016). Parts and Wholes. LIT Verlag. p. 146. ISBN 978-3-643-90789-9.
A major difference between the Shia and the Alawi, however, is that the latter worship Ali as a manifestation of the divine essence and believe in the reincarnation and transmigration of souls.
- Madeleine Pelner Cosman; Linda Gale Jones (2009). "The Nusayriyya Alawis". Handbook to Life in the Medieval World, 3-Volume Set. Infobase Publishing. p. 407. ISBN 978-1-4381-0907-7.
- ↑ Madeleine Pelner Cosman; Linda Gale Jones (2009). "The Nusayriyya Alawis". Handbook to Life in the Medieval World, 3-Volume Set. Infobase Publishing. pp. 406, 407. ISBN 978-1-4381-0907-7.
- ↑ Gisela Procházka-Eisl; Stephan Procházka (2010). The Plain of Saints and Prophets: The Nusayri-Alawi Community of Cilicia (Southern Turkey) and Its Sacred Places. Otto Harrassowitz Verlag. p. 20. ISBN 978-3-447-06178-0.
...for nearly a millennium the term by far most often used in both Oriental and Western sources for this group has been 'Nusayri'.
- ↑ Michael Knight (10 December 2009). Journey to the End of Islam. Soft Skull Press. p. 128. ISBN 978-1-59376-552-1.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Abdel Bari Atwan (2015). Islamic State: The Digital Caliphate. Saqi. p. 58. ISBN 978-0-86356-101-6.
- ↑ Tom, Heneghan (24 December 2011). "Who are the Alawites?" இம் மூலத்தில் இருந்து 7 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220307225030/https://www.reuters.com/article/us-syria-religion-alawites-idUSTRE7BM1J220111223.
- ↑ Carlos BC, Juan (9 December 2021). "The Assad Family Has Been Shaping Syria for 50 Years". Fair Observer. Archived from the original on 9 December 2021.
- ↑ Syrian security forces accused of killing dozens of Alawites