அலறும் பாகு குழந்தைகள் (அலறும் ஜெல்லி பேபிஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அலறும் பாகு குழந்தைகள் (அலறும் ஜெல்லி பேபிஸ்)[தொகு]

அலறும் பாகு குழந்தைகள்(screaming jelly babies or growling gummy bears)

அலறும் பாகு குழந்தைகள்(screaming jelly babies) என்றும் உறுமும் கம்மி கரடிகள்(growling gummy bears) என்றும் அழைக்கப்படும் வேதியியல் வகுப்பறை செயல்முறை விளக்கம் மற்றும் அதன் மாற்றுருவங்களும் உலகம் முழுவதும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன. உயர்நிலை பள்ளி அறிவியலில் உள்ள இலகுவான பகுதிகளை நிரூபிக்க இது பெரும்பாலும் சாயங்காலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனையானது, ஒரு துண்டு தின்பண்டத்தில் உள்ள ஆற்றலைக் காட்ட, பெரும்பாலும் நாடகங்களுக்காக பாகு குழந்தைகள் அல்லது கம்மி கரடிகளாக பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியும் குளோரேட், ஒரு வலுவான ஆக்சிஜனேற்றி(உயிர்வளியேற்றி) என்பதால் அதிவிரைவாக மிட்டாய்களில் உள்ள சர்க்கரையை உயிர்வளியேற்றுகிறது (ஓட்சியேற்றுகிறது). இதனால் தீச்சுடர்களாக வெடித்துச் சிதறுகிறது, மேலும், அதிவிரைவாக விரிவடைந்துவரும் வாயுக்கள் சோதனை குழாயிலிருந்து உமிழப்படுவதால், அலறல் சத்தம் உருவாகிறது. பஞ்சு மிட்டாயின் நறுமணம் வெளிப்படுகிறது. பிற மாவுச்சத்து அல்லது நீர்க்கரிமம் அடங்கிய பண்டத்தை(பொருளை) உருகிய குளோரேட் அடங்கிய சோதனைக் குழாய்களில் போட்டால், இதே மாதிரி விளைவுகள் ஏற்படும்.


மேற்கோள்கள்[தொகு]

1. http://news.bbc.co.uk/2/hi/uk_news/education/7758392.stm 2. http://old.urn1350.net/video/screaming-jelly-baby-experiment-student-science 3. https://web.archive.org/web/20110722080118/http://wikieducator.org/images/b/b2/Chem_11_Demos.pdf 4. https://secure.chem.byu.edu/lectureprep/node/491 5. https://lcu.edu/about-lcu/professors-with-answers/can-a-gummy-bear-scream.html 6. http://lecturedemos.chem.umass.edu/chemReactions5_5.html 7. https://en.wikipedia.org/wiki/Screaming_jelly_babies(மொழிபெயர்க்கப்பட்டது)

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]