அலங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சிக்கோட்டை இழுவைப்பால படிக்கட்டு எதிரே உள்ள ஒரு அலங்கம்

அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.[1] இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும். இதற்குள் ஒரு ஆள் நிற்கும் அளவிற்கு கிளி கூண்டு வடிவில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் துப்பாக்கி, ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது. இது போன்ற அலங்கங்கள் செஞ்சிக் கோட்டையின் மதில்களில் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்கம்&oldid=2048468" இருந்து மீள்விக்கப்பட்டது