அலகா சர்மா
அலகா சர்மா | |
|---|---|
| அசாம் சட்டப் பேரவை | |
| பதவியில் 2000–2001 | |
| முன்னையவர் | நாஜென் சர்மா |
| பின்னவர் | மதன் கலிதா |
| தொகுதி | நல்பாரி சட்டமன்றத் தொகுதி |
| பதவியில் 2006–2011 | |
| முன்னையவர் | மதன் கலிதா |
| பின்னவர் | ஜெயந்தா மல்லா பருவா |
| தொகுதி | நல்பாரி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | அசாம் கண பரிசத் |
| துணைவர் | நாஜென் சர்மா |
அலகா தேசாய் சர்மா (பெரும்பாலும் அலகா சர்மா (Alaka Sarma) என்று அழைக்கப்படுகிறார்) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அசாம் சட்டமன்றத்தில் நல்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் ஒரு பெண் ஆர்வலர். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அசாம் கண பரிசத்தில் சேர்ந்தார். 2000ஆம் ஆண்டில் நல்பாரி சட்டமன்றத் தொகுதியின் அப்போதைய உறுப்பினர் ஏ. நாகன் சர்மா இறந்ததைத் தொடர்ந்து 1 ஆண்டு காலத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் சர்மா முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2001-ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் மதன் கலிதாவிடம் சர்மா தோல்வியடைந்தார். 2006-ஆம் ஆண்டில், அசாம் சட்டமன்றத் தேர்தலில் நல்பாரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட சர்மா வெற்றி பெற்றார்.[2][3]
2019-ஆம் ஆண்டில், அசாம் அரசாங்கத்தால் 'பெற்றோர் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்புக்கான விதிமுறைகள் ஆணையராக சர்மா நியமிக்கப்பட்டார்.
அலகா சர்மா 27 பிப்ரவரி 2000 அன்று அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அசாம் பொதுப்பணித்துறை அமைச்சர் நாகன் சர்மாவின் மனைவி ஆவார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nalbari Election Results 2016, Candidate list, Winner, Runner-up and Current MLAs". Elections in India. Archived from the original on 23 June 2022. Retrieved 2022-06-23.
- ↑ Narzary, B. (2006). "The North East Mirror". The North East Mirror VIII (II): 25. http://pibguwahati.nic.in/nemirror-may2006.pdf. பார்த்த நாள்: 10 June 2022.
- ↑ "Assam Assembly Election Results in 2006". www.elections.in. Retrieved 10 June 2022.
- ↑ G. Ivashentsov (2020-06-30). "India's New Era". International Affairs 66 (3): 111–123. doi:10.21557/iaf.60072922. பன்னாட்டுத் தர தொடர் எண்:0130-9641. http://dx.doi.org/10.21557/iaf.60072922.