அலகாபாத் கிறித்துமசு பழ அணிச்சல்
தோற்றம்
| வகை | பழ அணிச்சல் |
|---|---|
| தொடங்கிய இடம் | பிரயாக்ராஜ், இந்தியா |
| முக்கிய சேர்பொருட்கள் | மைதா, முட்டை, சீனி, ஆரஞ்சுத்தோல் சர்க்கரைக் கலவை, பருப்பு |
அலகபாத் கிறித்துமசு பழ அணிச்சல் (Allahabadi Christmas fruitcak; Nastaleeq : الہ آبادی کرسمس فروٹ کیک, தேவநாகரி : इलाहाबादी क्रिसमस फ़्रूट केक) என்பது வட இந்திய நகரமான அலகாபாத்திலிருந்து தோன்றி அதன் பெயரைக் கொண்ட ஒரு பாரம்பரிய இந்திய ரம் பழ அணிச்சல் (கேக்) ஆகும்.[1][2] அலகாபாத் அணிச்சல் என்பது இந்தியா மற்றும் பாக்கித்தானின் கிறித்தவ மக்களால் கிறித்துமசு பண்டிகையின் போது நுகர்வுக்காக பிரபலமாக தயாரிக்கப்படும் ஒரு கிறித்துமசு கேக் ஆகும்.[3][2]
தயாரிப்பு
[தொகு]அலகாபாத் அணிச்சல் மைதா, முட்டை, வெண்ணெய், சர்க்கரை, பேடா, மர்மலேட், கொட்டைகள், இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.[2] உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் மேம்பட்ட சுவைக்காக ரம்மில் ஊறவைக்கப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rhodes, Pam (22 October 2015). Tidings of Comfort and Joy: A Christmas Feast of Faith and Fun. ISBN 9781473630055.
- ↑ 2.0 2.1 2.2 Cakewalk in Allahabad - Times Of India
- ↑ "Rich fruit cakes for a special Christmas". Dawn. 19 December 2011. https://www.dawn.com/news/681595/rich-fruit-cakes-for-a-special-christmas.
- ↑ "Christmas cakes around the world". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-20. Retrieved 2020-12-24.