உள்ளடக்கத்துக்குச் செல்

அற்பப் பொருள் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்க்கின்சனின் அற்பப் பொருள் விதி (Parkinson's law of triviality) என்பது 1957-ம் ஆண்டு நார்த்கோட் பார்க்கின்சன், உப்பு பெறாத (தேவையற்ற) காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்து வெளியிட்ட விதியாகும்.[1] எடுத்துக்காட்டிற்கு, ஒரு ஊருக்கு அணு உலை வருகிறது என்றால், அந்த அணு உலை பற்றி பேசும் நேரத்தைக் காட்டிலும் அந்த அணு உலையில் உள்ள மிதிவண்டி நிறுத்துமிடத்திற்கு என்ன நிற வண்ணம் அடிக்கலாம் என்று தான் அதிகம் நேரம் விவாதிப்பார்களாம். ஏன் என்றால், எல்லாருக்கும் அணு உலை நுட்பம் தெரியாது. ஆனால், வண்ணம் அடிப்பது பற்றி எல்லாராலும் கருத்து சொல்ல முடியும்.

இந்த விதி மென்பொருள் மேம்பாடு மற்றும் பிற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும்.[2].

உசாத்துணை

[தொகு]
  1. Parkinson, C. Northcote (1958). Parkinson's Law, or the Pursuit of Progress. John Murray. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140091076.
  2. Kamp, Poul-Henning (2 October 1999). "Why Should I Care What Color the Bikeshed Is?". Frequently Asked Questions for FreeBSD 7.X, 8.X, and 9.X. FreeBSD. பார்க்கப்பட்ட நாள் 31 July 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அற்பப்_பொருள்_விதி&oldid=2595051" இலிருந்து மீள்விக்கப்பட்டது