அறுவையினூடே கதிர்மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறுவையினூடே கதிர்மருத்துவம் (intraoperative radiotherapy, IORT) என்பது புற்றுநோய்க்காக அறுவை மருத்துவம் மேற்கொள்ளும் போது, முற்றும் அகற்றப்பட முடியாத புற்றுத் திசுக்களுக்குக் கதிர் மருத்துவம் மேற்கொள்ளும் முறையாகும். இங்கு ஒரே தவணையில் அதிக கதிர் ஏற்பளவினைக் கொடுத்து கதிர் மருத்துவத்தினையும், பின் அறுவையினையும் முடிவிற்குக் கொண்டுவரப்படுகிறது. இங்கு குறைந்த அளவுத் திசுக்களே கதிர் வீச்சுக்கு ஆட்படுகின்றன. சாதாரணத் திசு அதிக அளவில் சேதமுறுவதில்லை. இம்முறையில் கூறிடுவதனால் பெரும் நன்மை கிடைக்காது. அதிக கதிர் ஏற்பளவினைத் தாங்காத திசுக்களுக்கும் இம்முறை பொருந்தாது. பொதுவாக கிலோ வோல்ட் கதிர்களும் எலக்ட்ரான் கற்றையும் சிறந்தது. இதனால் பக்கத்திலுள்ள நல்ல திசுக்கள் அதிக கதிர்களை ஏற்கும் நிலை தவிர்க்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]