உள்ளடக்கத்துக்குச் செல்

அறுவடை நிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறுவடை நிலா அல்லது குருதி நிலா

அறுவடை நிலா அல்லது குருதி நிலா, பண்டையக் காலத்தில் இந்த முழு நிலா வெளிச்சத்தை நம்பியே விவசாயிகள் அறுவடையைத் தொடங்கினார்கள் என்பதால், இந்த முழு சந்திரனை அறுவடை நிலா என்றனர். [1]செப்டம்பர் 2015 இறுதியில் பவுர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு அருகே மிக வெளிச்சத்துடன் தோன்றியது. சாதாரண நிலாவை விட அறுவடை நிலா 30% கூடுதல் வெளிச்சம் கொண்டிருக்கும். 27 செப்டம்பர் 2015 அன்று பவுர்ணமியாகும். அதே நேரத்தில் சந்திர கிரகணமும் ஏற்பட்டது. பூமிக்கு அருகே தெரியும் முழு நிலவு கிரகணத்துக்குட்படுவதால் அது குருதி நிறத்தில் சிவப்பாக தோன்றும். அதையே இரத்த நிலா என்பர். [2]

இரத்த நிலா காட்சி 27 செப்டம்பர் 2015 இரவு தோன்றியது. இதனை அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டஙகளில் சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாட்டவர்கள், இந்திய நேரப்படி திங்கட் கிழமை அதிகாலை 5.40 மணி முதல் சூரியன் உதிக்கும்வரை இந்த நிகழ்வை நாசா இணையதளம் மூலம் காண முடிந்தது.

மேற்கொள்கள்

[தொகு]
  1. Neata, Emil. "The Hunter's Moon". Night Sky Info. பார்க்கப்பட்ட நாள் 29 December 2008.
  2. Seidelmann, P. Kenneth (2005). "Phases of the Moon". Explanatory Supplement to the Astronomical Almanac. University Science Books. p. 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-935702-68-7. They are the times when the excess of the Moon's apparent geocentric ecliptic longitude λM over the Sun's apparent geocentric ecliptic longitude is 0, 90, 180, or 270 ...

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவடை_நிலா&oldid=2919138" இலிருந்து மீள்விக்கப்பட்டது