அறுவடை நாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறுவடை நாள்
இயக்கம்ஜி. எம். குமார்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
டி. மனோகர்
திரைக்கதைஜீ. எம். குமார்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுவீ. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புசியாம்
கலையகம்சிவாஜி புரடக்சன்
வெளியீடுநவம்பர் 1, 1986 (1986-11-01)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அறுவடை நாள் (Aruvadai Naal) 1986 இல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். ஜி. எம். குமார் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரபு மற்றும் பல்லவி ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரீ. மனோகர், சாந்தி நாராயணசாமி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் 1986 நவம்பர் 1 இல் வெளியிடப்பட்டுள்ளது.[1] இத்திரைப்படம் முவ்வே கோவலுடு எனும் பெயரில் தெலுங்கில் மீள்உருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்[தொகு]

நிர்மலா (பல்லவி) அனாதை கிறிஸ்தவ பெண். ஒரு கன்னியாஸ்திரியாக வருவதையே இலட்சியமாக கொண்டவள். ஒரு கன்னியாஸ்திரி மடம் ஒன்றில் அவள் வசித்து வந்தாள். பின்னர் அவள் ஒரு கன்னியாஸ்திரியாக வரும் பொருட்டு கிராமமொன்றில் உள்ள கன்னியாஸ்திரி மடத்திற்கு அனுப்பப்படுகிறாள். அங்கு அவள் தேவாலய போதகர் வின்சென்ட் பார்க்கர் சூசையிடம் (ராம்குமார் கணேசன்) சேர்கிறாள். மேலும் அவள் கன்னியாஸ்திரியாக வரும் வரை தாதியாகவும் வேலை செய்கிறாள்.

பிறகு அவள் முத்துவேலை (பிரபு) சந்திக்கிறாள். முத்துவேல் அப்பாவியான மனிதன். இருவரும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். முத்துவேலின் தந்தை ரத்னவேல் (ஆர். பி. விஸ்வம்) அவன்மீது பாசம் காட்டாமல் ஒரு வேலைக்காரன் போலவ நடத்துகிறார். ஆனால் அவனின் தாய் வடிவு (வடிவுக்கரசி) முத்துவேலின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். முத்துவுக்கும் அவனின் மைத்துனியுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் போது அவர்களின் காதல் பற்றி தெரியவருகிறது. இவர்களின் காதல் திருமனத்திற்கு போதகர் வின்சென்ட் பார்க்கர் சூசை ஆதரவு தெரிவிக்கிறார். அதேசமயம் ரத்தினவேல் ராஜலட்சுமியின் (ராசி) பூப்புனித நீராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்கிறார். அவள் முத்துவேலின் முறைப்பெண், என்பதால் அவளுக்கு மாமனான முத்தவேல் மாலை அணிவிக்க வேண்டும். இந்த சடங்கின்போது முத்துவேல் அணிவிக்கும் மாலையில் தாலியை மறைவாக கோர்த்து வைகப்படுகிறது. இதை அறியாத முத்துவேல் மாலையை அணிவிக்கும் போது தாலியும் கழுத்தில் விழுகிறது. சூசை பொலிசில் ரத்தினவேலின் மீது போலிஸில் முறைப்பாடு செய்வதோடு அது மீளவும் பெறப்பட்டது. இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 1986 இல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of aruvadai naal". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2010-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100207225048/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=aruvadai%20naal. பார்த்த நாள்: 2012-12-16. 
  2. "Aruvadai Naal Songs". raaga.com. http://ww.raaga.com/channels/tamil/album/T0002650.html. பார்த்த நாள்: 2012-12-16. 
  3. "Aruvadai Naal". hummaa.com இம் மூலத்தில் இருந்து 25 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120125042506/http://www.hummaa.com/music/album/aruvadai-naal/30500. பார்த்த நாள்: 2012-12-16. 
  4. "Aruvadai Naal Songs — Illayaraja". oosai.com இம் மூலத்தில் இருந்து 3 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121003021936/http://oosai.com/tamilsongs/aruvadai_naal_songs.cfm. பார்த்த நாள்: 2012-12-16. 
  5. "Aruvadai Naal — Illayaraja". thiraipaadal.com. http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00058. பார்த்த நாள்: 2012-12-16.