உள்ளடக்கத்துக்குச் செல்

அறுவடைத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடாவின் ஒன்ராறியோவின் ஆமில்டனில் நடைபெறும் வருடாந்திர அறுவடை விழாவான ராக்டன் உலகக் கண்காட்சியில் சோளம்

அறுவடை திருவிழா (Harvest festival) என்பது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் முக்கிய அறுவடைக் காலத்தில் நடைபெறும் வருடாந்திரக் கொண்டாட்டமாகும். உலகெங்கிலும் உள்ள காலநிலை, பயிர்களில் உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, அறுவடை திருவிழாக்களை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் காணலாம். அறுவடைத் திருவிழாக்கள் பொதுவாகக் குடும்பத்தினர், பொதுமக்கள் விருந்துடன் கொண்டாடுகிறார். இதில் பயிர்களிலிருந்து பெறப்படும் உணவுகள் அடங்கும்.

ஐக்கிய இராச்சியத்தில், புறமாதக் காலத்திலிருந்தே வெற்றிகரமான அறுவடைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பாரம்பரியத்தைப் பொறுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறுவடை திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. நவீன அறுவடைத் திருவிழா கொண்டாட்டங்களில் பாடல்களைப் பாடுவது, பிரார்த்தனை செய்யப்படுகின்றது. அறுவடை விழா, அறுவடை இல்லம், அறுவடையின் நன்றி அல்லது நன்றி செலுத்தும் அறுவடை திருவிழா என்று அழைக்கப்படும் திருவிழாவில் பழங்களும் பிற உணவுகளும் கூடைகளில் இட்டு தேவாலயங்களை அலங்கரிப்பதும் அடங்கும்.

ஐக்கிய இராச்சியத்திலும், இங்கிலாந்து கரீபியன் தேவாலயங்களிலும் பள்ளிகளிலும் சில கனேடியத் தேவாலயங்களிலும், மக்கள் தோட்டத்திலிருந்தும் பண்ணையிலிருந்தும் பெறப்படும் விளைபொருட்களைக் கொண்டு வருகிறார்கள். உணவு பெரும்பாலும் உள்ளூர் சமூகத்தின் ஏழைகளுக்கும் மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. தேவாலயம் அல்லது தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுதலும் இக்காலத்தில் நடைபெறுகிறது.

எத்தியோப்பியாவில் உள்ள ஓரோமோசு, மழைக்காலத்தின் முடிவையும் அறுவடையின் தொடக்கத்தையும் குறிக்கும் அறுவடைத் திருவிழா, நன்றி செலுத்தும் இர்ரீச்சாவையும் கொண்டாடுகிறது. இது சமூகத்திற்குள் நன்றியுணர்வின் கொண்டாட்டத்தின் நேரம்.

ஆசியாவில் அறுவடை திருவிழாக்களில் சீன நடு இலையுதிர் காலத் திருவிழா (Синсия отмония) அடங்கும். இது உலகில் மிகவும் பரவலாக நடைபெறும் அறுவடை விழாக்களில் ஒன்றாகும். ஈரானில் பெர்செபோலிசில் மெர்கன் ஆடம்பரமாகக் கொண்டாடப்பட்டது. இது அறுவடைக்கான நேரம் மட்டுமல்ல, வரி வசூலிப்பதற்கான நேரமும் கூட. பாரசீகப் பேரரசின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்கள் மன்னருக்குப் பரிசுகளைக் கொண்டுவருவர். அனைவரும் ஓர் உற்சாகமான திருவிழாவினைக் கொண்டாடினர். இந்தியாவில், மகர சங்கராந்தி, தைப்பொங்கல், உத்தராயணம், உலோகிரி, சனவரி மாதத்தில் மாக் பிஹு அல்லது போகாலி பிஹு, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹோலி, ஏப்ரல் மாதத்தில் வைசாகி, ஆகத்து-செப்டம்பர் மாதங்களில் ஓணம் ஆகியவை முக்கியமான அறுவடை திருவிழாக்களாகும்.

யூதர்கள் இலையுதிர்காலத்தில் சுக்கோட் என்ற ஒரு வாரக் கால அறுவடை திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். திருவிழாவினைக் கொண்டாட்டம் யூதர்கள் சுக்காக் என்று அழைக்கப்படும் ஒரு தற்காலிகக் குடிசை அல்லது குடிலைக் கட்டுகிறார்கள். மேலும் இவ்வாரத்தை இந்தக் குடிசையினுள் வாழ்ந்து, சாப்பிட்டு, தூங்கி, பிரார்த்தனை செய்து செலவிடுகிறார்கள். அறுவடையின் போது இசுரேலிய விவசாயிகள் வாழும் கூடாரங்களை இது நினைவூட்டுகிறது. இதன் முடிவில் இவர்கள் அறுவடையின் ஒரு பகுதியை எருசலேமில் உள்ள கோவிலுக்குக் கொண்டு வருவார்கள்.

ஆங்கிலம் பேசும் உலகில் பழக்கவழக்கங்களும் மரபுகளும்

[தொகு]

ஆகத்து 1ஆம் தேதி அறுவடை பருவத்தின் தொடக்கத்தில் ஆரம்ப அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இது 'ரொட்டி மாஸ்' என்று பொருள்படும் லம்மாஸ் என்று அழைக்கப்படுகிறது. ரொட்டியைப் புனிதப்படுத்துவதற்கான இலத்தீன் பிரார்த்தனை துர்காம் சடங்காக அனுசரிக்கப்படுகிறது. விவசாயிகள் புதிய கோதுமையிலிருந்து ரொட்டிகளைத் தயாரிக்கின்றனர். இவை அறுவடைக்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறப்புச் சேவையின் போது உள்ளூர் தேவாலயத்தில் ஒற்றுமை ரொட்டியாக வழங்கப்படும்.

பதினாறாம் நூற்றாண்டில், இறுதியில் அறுவடை சேகரிப்பு குறித்துப் பல பழக்கவழக்கங்கள் தொடங்கியதாகத் தெரிகிறது. "ஹூக்கி, ஹூக்கி" என்று கூச்சலிடும் ஒரு பாரம்பரியமான முழுச் சுமை கொண்ட வண்டியுடன் அறுவடை செய்பவர்கள், அறுவடையின் 'எஜமானராக' செயல்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பணம் கேட்கும் முன்னணி அறுவடையாவார்களில் ஒருவர் இதில் அடங்குவர். தாமசு நாசே எழுதிய ஒரு நாடகம், சம்மர்ஸ் லாஸ்ட் வில் அண்ட் டெஸ்டமென்ட். 1600ஆம் ஆண்டு இது முதலில் இலண்டனில் வெளியிடப்பட்டது. ஆனால் உள் சான்றுகளிலிருந்து அக்டோபர் 1592-இல் குரோய்டனில் முதன்முதலில் நிகழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் பல அம்சங்களை நிரூபிக்கும் ஒரு காட்சி உள்ளது. இக்காட்சியில் அறுவடை நிகழ்வு உருவகப் படுத்தப்படுகிறது. இதில் விவசாய உடையணிந்த ஆண்கள் கலந்து கொள்கிறார்கள். இவர் தன்னை அவர்களின் "எஜமானர்" என்று குறிப்பிடுகிறார். மேலும் பார்வையாளர்களிடம் "மானியத்திற்காக" கெஞ்சுவதன் மூலம் காட்சியை முடிக்கிறார். இந்தக் காட்சி சமகால அறுவடைக் கொண்டாட்டங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கால ஆங்கிலக் குடியேறிகள் அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் யோசனையை வட அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றனர். 1621ஆம் ஆண்டில் யாத்ரீகர்களால் நடத்தப்பட்ட அறுவடை நன்றி செலுத்துதல் மிகவும் பிரபலமானது.

போலந்தின் செசுடோசோவா உள்ள ஜாசுனா கோரா உரோமன் கத்தோலிக்க சரணாலயத்தில் தேசிய அறுவடை நன்றி விழா.
போலந்தின் ஸ்பாலாவில் அறுவடை விழாவில் குடியரசுத் தலைவர்

இப்போதெல்லாம் இந்த திருவிழா அறுவடையின் முடிவில் நடைபெறுகிறது. இது ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகிறது. சில நேரங்களில் அண்டை தேவாலயங்கள் வெவ்வேறு ஞாயிற்றுக்கிழமைகளில் அறுவடை விழாவை நடைபெறும். இதனால் மக்கள் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவிப்பதில் கலந்து கொள்ளலாம்.

20ஆம் நூற்றாண்டு வரை, பெரும்பாலான விவசாயிகள் அறுவடையின் முடிவை அறுவடை இரவு உணவு என்று அழைக்கப்படும் ஒரு பெரிய விருந்துடன் கொண்டாடினர். இவ்விருந்திற்கு அறுவடைக்கு உதவிய அனைவரும் அழைக்கப்பட்டனர். இது மெல் இரவுணவு என்று அழைக்கப்பட்டது. "மெல்" அல்லது "நெக்" என்பது வயல்களில் சோளம் அல்லது கோதுமையின் கடைசி பகுதியாகும். இவற்றை வெட்டுவது அறுவடை வேலையின் முடிவையும், விருந்தின் தொடக்கத்தையும் குறிக்கும். வயலில் உள்ள கடைசி சோளத்தினை அறுவடை செய்வது துரதிர்ஷ்டமாகக் கருதினர். விவசாயியும் அவருடைய தொழிலாளர்களும் மற்ற பண்ணைகளில் அறுவடை செய்பவர்களுக்கு எதிராக முதலில் அறுவடையை முடிக்கப் போட்டியிடுவார்கள். இவர்கள் அறுவடை முடித்துவிட்டதாக அறிவிக்கும்படி கூச்சலிடுவார்கள். சில பகுதிகளில், சோளம் முழுவதுமாக வெட்டப்படும் வரை தொழிலாளர்கள் தங்கள் அரிவாள்களை அதில் வீசுவதன் மூலம் சோளம் கடைசி வரை வெட்டுவார்கள்.

சில தேவாலயங்களிலும் கிராமங்களில் இன்னும் அறுவடை இரவு உணவு வழக்கம் உள்ளது. தேவாலயங்களில் அறுவடை விழாவைக் கொண்டாடும் ஐக்கிய இராச்சியப் பாரம்பரியம் 1843ஆம் ஆண்டில் தொடங்கியது. அருட்தந்தை இராபர்ட் காக்கர், கார்ன்வாலின் மோர்வென்சுடோவில் உள்ள தனது தேவாலயத்தில் ஒரு சிறப்பு நன்றி சேவைக்குத் திருச்சபை உறுப்பினர்களை அழைத்தார். வாருங்கள், நன்றியுள்ள மக்களே, வாருங்கள், அனைத்தும் பிரகாசமானவை, அழகானவை என்று அழைத்தார். ஆனால் இடச்சு, செருமன் அறுவடை பாடல்களும் மொழிபெயர்ப்பில் உள்ளன (எடுத்துக்காட்டாக, நாங்கள் வயல்களை உழுகிறோம், சிதறடிக்கிறோம்) அறுவடை திருவிழா பற்றிய இவரது யோசனையைப் பிரபலப்படுத்த இப்பாடல்கள் உதவின. இந்த வருடாந்திரத் திருவிழாவின் போது வீட்டில் வளர்க்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட பொருள்களுடன் தேவாலயங்களை அலங்கரிக்கவும் செய்தனர். செப்டம்பர் 8,1854 அன்று நோர்போக்கின் ப்ரூக் ரெக்டர் ரெவ்ட் வில்லியம் பீல், அறுவடையின் முடிவில் அவமானகரமான காட்சிகளாக அவர் கண்டதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அறுவடை விழாவை நடத்தினார், மேலும் பிற நோர்போக் கிராமங்களில் 'அறுவடை இல்லங்களை' ஊக்குவித்தார். இங்கிலாந்து திருச்சபையின் நாட்காட்டியின் ஒழுங்கமைக்கப்பட்ட பகுதியாக இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட மற்றொருவர் 1854ஆம் ஆண்டில் அல்லது ஹண்டிங்டன்ஷையரின் எல்டனில் உள்ள ரெவ் பியர்ஸ் கிளௌட்டன் ஆவார்.[1]

பிரித்தானிய மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் விளைபொருட்களைக் குறைவாக நம்பியிருப்பதால், பல அறுவடை விழா கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேவாலயங்கள் அறுவடையை வளரும் நாடுகளில் உள்ள மக்களைப் பற்றிய விழிப்புணர்வுடனும் அக்கறையுடனும் இணைத்துள்ளன. வளரும் நாடுகளில் போதுமான தரத்துடன் கூடிய தேவையானஅளவிலான பயிர்களை வளர்ப்பது ஒரு போராட்டமாக உள்ளது. வளர்ச்சி, நிவாரண அமைப்புகள் பெரும்பாலும் அறுவடை நேரத்தில் தேவாலயங்களில் பயன்படுத்தப்படும் தானியங்களை உற்பத்தி செய்கின்றன,

ஆரம்ப நாட்களில், அறுவடையின் தொடக்கத்திலும் முடிவிலும் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெற்றன.

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் சோளம் [தானிய] ஆவி அல்லது சோளம் தாய் மீதான ஆன்மீக நம்பிக்கையில்" தோற்றத்தைக் கண்டறிந்துள்ளது. சில பிராந்தியங்களில் விவசாயிகள் அறுவடை செய்யப்பட வேண்டிய தானியத்தின் கடைசி உறையில் ஓர் ஆவி இருப்பதாக நம்பினர். ஆவியைத் துரத்த, அவர்கள் தானியத்தைத் தரையில் அடித்தனர். சிலர் தானியங்களை அடுத்த பயிரிடலுக்காகப் பாதுகாத்தனர். பின்னர் இவர்கள் புதிய பயிருக்கு ஆசி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தானியத்தினை மண்ணில் விதைக்க மீண்டும் உழுதனர்.

  • அறுவடையின் ஒவ்வொரு நாளும் தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டுக் கேட்கப்படும்.
  • கடைசியாக அறுவடை செய்யப்பட்ட சோளம் உறையிலிருந்து, சோளம் டாலி தயாரிக்கப்பட்டது. சோளம் டாலிக்கு பெரும்பாலும் விருந்து மேஜையில் ஒரு கௌரவ இடம் இருந்தது. அடுத்த வசந்த காலம் வரை இது வைக்கப்பட்டது.
  • கார்ன்வாலில், 'நெக் அழுகை' விழா நடைபெற்றது. இன்றும் இது தி ஓல்ட் கார்ன்வால் சமூகத்தால் ஆண்டுதோறும் மீண்டும் இயற்றப்படுகிறது.
  • அறுவடைப் பொருட்களை ஏற்ற்சி செல்லும் கடைசி வண்டிக் குதிரை மலர்களும் வண்ணமயமான நாடாக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
  • விவசாயி வீட்டில் ஓர் அற்புதமான அறுவடை விருந்து நடைபெற்றது. அறுவடை முடிவைக் கொண்டாட விளையாட்டுகள் விளையாடப்பட்டன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Burn-Murdoch, Bob (1996). What's So Special About Huntingdonshire?. St Ives: Friends of the Norris Museum. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9525900-1-8.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவடைத்_திருவிழா&oldid=4202016" இலிருந்து மீள்விக்கப்பட்டது