உள்ளடக்கத்துக்குச் செல்

அறுமுகனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறுமுகனம் என்பது ஆறு முகங்களைக் கொண்ட ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி .கைகளால் தட்டி ஒலி எழுப்பும் படியாக வடிவமைக்கப் பட்டது. இது உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மை கொண்டது. இதனை முழக்கும் பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும். முதலில் ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தன. இது தபேலா வடிவத்திலான 6 வித இசைக்கருவிகள் ஒருங்கிணைந்து, ஆறு விதமான நாதத்தை பரப்பும் வகையில் உருவாக்கப் பட்டது

இக் கருவி டிசம்பர் 28, 2001 இல் புதுவை முதலமைச்சர் ந. அரங்கசாமி முன்னிலையில் அறிமுகப் படுத்தப்பட்டது. அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகமும் செய்து வைகக்கப் பட்டது. அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இக்கருவியை ஐந்தரை ஆண்டுகள் செலவழித்து உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார்.[1]

வெளியிணைப்புகள்

[தொகு]
தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
காற்றிசைக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |

மேற்கோள்கள்

[தொகு]
  1. இசை உலகில் புதிய கருவி "அறுமுகனம்'
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுமுகனம்&oldid=1882326" இலிருந்து மீள்விக்கப்பட்டது