அறுபுளோரோவளையபியூட்டீன்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,2,3,3,4,4-அறுபுளோரோவளையபியூட்-1-யீன் | |
| வேறு பெயர்கள்
1,2,3,3,4,4-அறுபுளோரோவளையபியூட்டீன், பெர்புளோரோவளையபியூட்டீன்
| |
| இனங்காட்டிகள் | |
| 697-11-0 | |
| ChemSpider | 12242 |
| EC number | 211-803-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 12767 |
| |
| UNII | TGC3HN2GMW |
| பண்புகள் | |
| C4F6 | |
| வாய்ப்பாட்டு எடை | 162.03 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற வாயு |
| உருகுநிலை | −60 °C (−76 °F; 213 K) |
| கொதிநிலை | 5.5 °C (41.9 °F; 278.6 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அறுபுளோரோவளையபியூட்டீன் (Hexafluorocyclobutene) என்பது C4F6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். (CF2)2(CF)2 என்ற என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை குறிப்பிடலாம். 1,2,3,3,4,4-அறுபுளோரோவளையபியூட்-1-யீன், 1,2,3,3,4,4-அறுபுளோரோவளையபியூட்டீன், பெர்புளோரோவளையபியூட்டீன் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். நிறமற்ற வாயுவான இச்சேர்மம் சுகுவாரிக் அமிலம்[1] உட்பட பல்வேறு சேர்மங்களின் தயாரிப்புக்கான முன்னோடி சேர்மமாக உள்ளது. அறுபுளோரோவளையபியூட்டீனை குளோரோமுப்புளோரோயெத்திலீனிலிருந்து இரண்டு படிகளில் தயாரிக்க முடியும். வெப்ப நிலை மாற்றியமாக்கல் மூலம் 1,2-இருகுளோரோ-1,2,3,3,4,4-அறுபுளோரோவளையபியூட்டீன் கிடைக்கிறது. பிந்தைய சேர்மத்தின் குளோரின் நீக்கல் வினை அறுபுளோரோவளையபியூட்டீனை உருவாக்குகிறது:[2]
- C4F6Cl2 + Zn → C4F6 + ZnCl2
பாதுகாப்பு
[தொகு]நஞ்சுத்தன்மையின் வெளிப்பாட்டிற்கான குறியீடான உயிர் கொல்லும் அளவு எல்டி = 6000 மி.கி./நி./மீ−3 (எலிகள்) இருப்பதால் அறுபுளோரோவளையபியூட்டீன் பெர்புளோரோ ஐசோபியூட்டீனை நினைவூட்டுவதாக உள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ David M. Lemal, Xudong Chen (2005). "Fluorinated Cyclobutanes and Their Derivatives". In Zvi Rappoport; Joel F. Liebman (eds.). The Chemistry of Cyclobutanes. PATAI'S Chemistry of Functional Groups. pp. 955–1029. doi:10.1002/0470864028.ch21. ISBN 0470864001.
- ↑ Fuller, G.; Tatlow, J. C. (1961). "Some Isomeric Hexafluorocyclobutanes and Pentafluorocyclobutenes". Journal of the Chemical Society (Resumed): 3198. doi:10.1039/JR9610003198.
- ↑ Timperley, Christopher M. (2000). "Highly-toxic fluorine compounds". Fluorine Chemistry at the Millennium. pp. 499–538. doi:10.1016/B978-008043405-6/50040-2. ISBN 9780080434056.