அறுபதாம் கோடை
| அறுபதாம் கோடை |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 70 - 75 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு சுமார் 600 கிலோ[1] |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
அறுபதாம் கோடை (Arupatham kodai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். ஒரு சிலபகுதிகளில் பூங்கார் என்றும் அழைக்கப்படும் இந்நெல் இரகம், சம்பா நெல் அறுவடை செய்த நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு உழவு செயது விதைப்பதாகவும் கூறப்படுகிறது.[1] மேலும் இவ்வகையின் அரிசியில் சோறு, இட்லி, தோசை, இடியப்பம், பிட்டு, இனிப்புப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது.[2]
காலம்
[தொகு]மிகக் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 70 - 75 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. [1] மேலும் இது பொதுவாக நவரை காலத்தில் (டிசம்பர் 15 முதல் மார்ச் 14 வரை) பயிரிடப்படுகிறது என்றாலும், மற்ற பருவங்களிலும் சிறப்பாக விளைகிறது எனவும் அறியப்படுகிறது.[2]
சாகுபடி
[தொகு]நவரைப் பருவம் ஏற்றதாக கூறப்படும் இந்த நெல் இரகம், சேற்று விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் களர் மண், களிமண் மற்றும் மணல் கலந்த களிமண் போன்ற நிலங்களில் பயிரிட உகந்ததாக கருதப்படும் இது, முதிர்வடையும் பருவத்தில் சாயக்கூடியதாகும்.[1] 1952 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் போது இந்த இரகம் வெள்ளத்தைத் தாங்கி விவசாயிகளுக்கு நியாயமான மகசூலைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது. வறட்சி, வெள்ளம் என இரண்டு சூழலிலும் மற்றும் உப்பு மண்ணில் நன்றாக வளரும் என கூறப்படுகிறது.<ref name="nammane">
மகசூல்
[தொகு]சராசரியாக 75.3 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 81.1 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இதன் நெற்கதிர்களின் நீளம், 14.3 - 15.2 சதம மீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 49 - 64 என கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 600 கிலோவாகவும் (8 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 900 (30 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
பின்னணி
[தொகு]இந்த வகை, சாகுபடி காலம் மற்றும் பருவத்தின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. (அருபது - அறுபது மற்றும் கோதை - கோடை). மேலும் இது பெண்களின் அரிசி என்றும், மதுரை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது எனவும், இந்த வகையின் விவரங்கள் அபிதான சிந்தாமணி எனும் இலக்கியக் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.[2]
நெல்மணியின் இயல்பு
[தொகு]அறுபதாம் கோடையின் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் அடர் பச்சையாகவும், முதிர்ச்சிப் பருவத்தில் மஞ்சள் நிறத்தில் கருமை நிறக் கோடுகளுடன் காணப்படும். மேலும் இதன் தானியம் தடித்தும் (மோட்டா இரகம்), அரிசி சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.[1]