அறுகுளோரோ இருசிலேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறுகுளோரோ இருசிலேன்
Si2Cl6.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சாகுளோரோடைசிலேன்
வேறு பெயர்கள்
இருசிலிக்கான் அறுகுளோரைடு
இனங்காட்டிகள்
13465-77-5
பண்புகள்
Si2Cl6
வாய்ப்பாட்டு எடை 268.88 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
உருகுநிலை
கொதிநிலை 144 °C (291 °F; 417 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அறுகுளோரோஇருசிலேன் (Hexachlorodisilane) என்பது Si2Cl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும்[1]. நிறமற்ற திரவமாகக் காணப்படும் இத்திரவம் ஈரக் காற்றில் புகைகிறது. வினைப்பொருள் மற்றும் சிலிக்கான் உலோகத்தின் துரிதமாக ஆவியாகின்ற தயாரிப்பு முன்னோடியாகவும் விளங்குகிறது.

தயாரிப்பு மற்றும் அமைப்பு[தொகு]

அறுகுளோரோஇருசிலேன் மூலக்கூறானது ஈத்தேன் மூலக்கூறின் அமைப்பைப் போலவே Si-Si பிணைப்பு நீளம் 0.233 நானோமீட்டர் அளவுடன் அமைந்துள்ளது[2] .

கால்சியம் சிலிசைடு போன்ற சிலிசைடுகளை குளோரினேற்றம் செய்வதால் அறுகுளோரோ இருசிலேன் உருவாகிறது. இந்தத் தனித்துவ வினை வருமாறு:[3]

CaSi2 + 4 Cl2 → Si2Cl6 + CaCl2

வினைகள் மற்றும் பயன்கள்[தொகு]

400°செல்சியசு வெப்பநிலையில் காற்று அல்லது நைட்ரசனில் அறுகுளோரோஇருசிலேன் பல மணி நேரங்களுக்கு நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. ஆனால் அறை வெப்பநிலையிலும் கூட இலூயிக் அமிலத்தின் முன்னிலையில் பன்னிருகுளோரோநியோஐஞ்சிலேன் மற்றும் சிலிக்கான் நாற்குளோரைடுகளாக மாறுகிறது.

3 Si2Cl6 → SiCl4 + Si5Cl12

சிலிக்கான் அடிப்படையிலான சேர்மங்களை உருவாக்குவதில் இம்மாற்று முறை பயனுள்ளதாக இருக்கிறது. இச்சேர்மங்கள் ஒளிவோல்ட்டா மின்கலம் போன்ற குறைகடத்தும் கருவிகளில் பயனாகிறது.[1]

பாசுபீன் ஆக்சைடு போன்ற சேர்மங்களில் ,பொதுச் செயல்முறையான ஆக்சிசன் நீக்க வினைகளுக்கும் இச்சேர்மம் ஒரு முகவராகச் செயல்படுகிறது.

2 Si2Cl6 + OPR3 → OSi2Cl6 + PR3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Simmler, W. "Silicon Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH. எஆசு:10.1002/14356007.a24_001
  2. T.L. Cottrell, "The Strengths of Chemical Bonds," 2nd ed., Butterworths, London, 1958.
  3. Seo, E.S.M; Andreoli, M; Chiba, R (2003). "Silicon tetrachloride production by chlorination method using rice husk as raw material". Journal of Materials Processing Technology 141 (3): 351. doi:10.1016/S0924-0136(03)00287-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுகுளோரோ_இருசிலேன்&oldid=1933794" இருந்து மீள்விக்கப்பட்டது