அறிவியல் பொருட்காட்சி அமைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியல் பொருட்காட்சி அமைத்தல்=[தொகு]

    உங்கள் பள்ள ஆண்டுதோறும் அறிவியல் பொருட்காட்சி நடத்துகிறதா? உங்கள் ஆசிரியர் சிறப்பு அறிவியல் பரிசோதனைத் திட்டம் ஒன்றைச் செயல்படும்படி செய்ய வேண்டும். நீங்கள் பெருமை கொள்கிற அளவுக்கு அறிவியல் பரிசோதனைத் திட்டம் ஒன்றைத் தயாரித்து அதனை செய்து முடிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது.
    பொதுவாக அறிவியல் பரிசோதனைத் திட்டம் ஒன்றை வடிவமைப்பதற்கு உங்களுக்குத் தாராளமாக நேரம் இருக்கும். அதற்காக, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கடைசி வாரம் வரை இருந்துவிட்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். பரிசோதனைச் செய்ய வேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும், பரிசோதனை ஒன்றை வடிவமைக்க வேண்டும். இதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

ஆர்வமுள்ள தலைப்பு[தொகு]

  ஒரு சில அறிவியல் தலைப்புகள் மற்றவற்றை விட உங்களுக்கு ஆர்வமூட்டவனவாக இருக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஏதாவது ஒரு பிரிவில் நீங்கள் ஆர்வமுள்ளவராக இருப்பின், அதுதான் நீங்கள் பரிசோதனைத் திட்டத்தைத் துவங்கும்போது கவனத்தைக் குவிக்க வேண்டிய அறிவியல் துறை என்று முடிவு செய்து கொள்ளலாம்.

நடைமுறைக்கேற்ற தலைப்பு[தொகு]

   உங்களால் பரிசோதனை செய்ய இயலாத பொருளின் மீது நீங்கள் சோதனை செய்ய முயற்சி செய்யக்கூடாது. உதாரணமாக நியு்க்ளியர் ரியாக்டருடன் நிங்கள் பரிசோனை செய்ய முடியாது. ஓரளவு அடிப்படை விவரங்கள் அறிந்துள்ள துறையில் சோதனை முயற்சி செய்வது நல்லது.

சுயமான கருத்து[தொகு]

  சிறிது நேரம் யோசியுங்கள் இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியாக செய்யுங்கள் இதனை ஆசிரியரிடம் கொண்டு செல்லுங்கள். அவர்கள் மேலும் உற்சாகமடைவார்கள். உங்களுக்கு ஊக்கம் கொடுப்பர்.

புதுக் கருத்து[தொகு]

   புதிதாக ஒரு கருத்தை உருவாக்குவதற்கு உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அதைத் தீர்ப்பதற்கும் சில வழிகள் உள்ளன. ஏதேனும் அறிவியல் துறையில் தொழில் முறையாகத் தொடர்பில் உள்ள யாராவது உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ தெரிந்தவராக இருக்கலாம். அத்தகையவரைச் சந்தித்து, உங்களுடைய திட்டத்துக்கு ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள்(1).

மேற்கோள்கள், >1.அன்புள்ள அறிவியல், ஆசிரியர் இராபர்ட் உறர்ஸ்க்ஃபெல்ட், மொழிபெயர்ப்பு, சா.ஜெயராஜ்யு செஞ்சுரி புக் உறவுஸ், சென்னை-98