அறிவியல், அரசியல் கல்விக் கழகம், பிரான்சு
அகாதமி தசு சயின்சஸ் மொரேல்ஸ் எட் பாலிட்டிக்ஸ் எனும் அறிவியல் மற்றும் அரசியல் கல்விக் கழகம், பிரான்சு (Académie des Sciences Morales et Politiques) பிரான்சு நாட்டின் அறிஞர் சமூகமாகும். இது பிரான்சு நிறுவன ஐந்து கல்விக்கழகங்களில் ஒன்றாகும்.

அமைப்பு
[தொகு]அகாதமியின் உறுப்பினர்கள் சக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது இவர்களின் நிபுணத்துவத்தைப் பொறுத்து 6 வெவ்வேறு பிரிவுகளில் 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]அகாதமி 1795இல் நிறுவப்பட்டது. இதன் 1803இல் முடக்கப்பட்டது. மேலும் 1832இல் கிங் லூயிஸ் பிலிப் குய்சோட் முறையீடு மூலம் மீண்டும் நிறுவப்பட்டது.[1] இது ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் முக்கிய நோக்கத்திற்காக மன தத்துவம், சட்டம் மற்றும் நீதித்துறை, அரசியல் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரங்கள், பொது மற்றும் தத்துவ வரலாறு மற்றும் அரசியல், நிர்வாகம் மற்றும் நிதி பற்றிய துறைகளும் இணைக்கப்பட்டது. இது பௌஜோர், ஃபாச்சர், போனஃபோஸ், ஹால்பன், போர்டின் மற்றும் பிற பரிசுகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டு திசம்பரிலும் இதன் வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. இது நினைவு மலர் ஒன்றையும் வெளியிடுகிறது.
பணிகள்
[தொகு]குடியரசின் சனாதிபதியின் பாதுகாப்பின் கீழ் இருப்பதால், குறிப்பிட்ட தகுதியுடன் கூடிய ஒரு தனித்துவமான சட்ட நிறுவனமான அகாதமி, அடிப்படை அல்லது பதிலளிக்கப்படாத தலைப்புகளில் அர்ப்பணிக்கப்பட்ட வழக்கமான கூட்டங்கள் மற்றும் விவாதங்களை ஊக்குவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், சில நடைபெற்ற கூட்டங்களின் கருப்பொருள்கள்.
தற்போதைய உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]- செரார்ட் அந்தோவான்
- பெர்னார் அர்னோ
- ஜீன் பெச்லர்
- மரியான் பாஸ்டிட்-ப்ருகியர்
- பியர் பாச்செட்
- அலெய்ன் பெசன்கான்
- ஜாக் போரே
- பெர்னார் பூர்ஷ்வா
- கேப்ரியல் டி ப்ரோக்லி
- ஜீன்-கிளாட் காசனோவா
- சாந்தல் டெல்சோல்
- ரெனால்ட் டெனாய்க்ஸ் டி செயின்ட் மார்க்
- பிரான்சுவா டி'ஒர்சிவல்
- ரோலண்ட் டிராகோ
- ஜாக் டுபாக்கியர்
- யுவோன் கட்டாசு
- சாலமோன் ஹா-லேவி
- லூசியன் இஸ்ரேல்
- ஜாக் டி லாரோசியர்
- ஜீன் மெஸ்னார்ட்
- தியரி டி மான்ட்பிரியல்
- அலெய்ன் பிளான்டே
- பெர்ட்ரண்ட் செயின்ட்-செர்னின்
- பிரான்சுவா டெர்ரே
- கிளோடின் டைர்செலின்
- ஜீன் துலார்ட்
வெளிநாட்டு இணை உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]
- ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லஸ்
- ஜோர்டானின் இளவரசர் ஹசன்
- முதலாம் வான் கார்லோஸ்
- டோரா பகோயன்னிசு
- ஸ்டீபன் பிரையர்
- ஜீன்-க்ளோட் ஜங்கர்
- இஸ்மாயில் கடாரே
- மரியோ மாண்டி
- டோமாசு மசாரிக்
- எட்வர்ட் பெனசு
- ஜேவியர் பெரெஸ் டி குயல்லர்
- பாதிரியார் பர்த்தலோமியோ[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ New International Encyclopedia.
- ↑ "The 2025 Templeton Prize to Ecumenical Patriarch Bartholomew". Hellenic News of America. 2025-04-10. https://hellenicnews.com/the-2025-templeton-prize-to-ecumenical-patriarch-bartholomew/.
வெளியிணைப்புகள்
[தொகு]- (in பிரான்சியம்) Official site