அறியாமைக் காலம்
Jump to navigation
Jump to search
இசுலாமிய நூல்களின் படி இஸ்லாத்திற்கு முற்பட்ட காலம் ஜாஹிலியாக் காலம் என அழைக்கப்படுகிறது. ஜாஹிலியாக் காலம் எனும் தொடரை அறியாமைக்காலம் என்பர். இலக்கியத்திலும் அல்-குர் ஆனின் சில இடங்களிலும் அறிவு என்ற பதத்திற்கு எதிர்க் கருத்தாக அறியாமை எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜாஹிலிய்யத், ஜாஹில், ஜாஹிலூன் முதலான அரபுப் பதங்கள் ஜஹ்ல் எனும் மூலப்பதத்திலிருந்தே பிறந்துள்ளன. ஜாஹிலிய இலக்கியத்தில் இப்பதம் "மிலேச்சத்தனம்" எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.
அரேபியாவின் புவியியல்[தொகு]
அரேபியாவின் பெயர்[தொகு]
அரேபியர் தாம் வாழும் பூமியை "ஜஸீரதுல் அரப்" என்று அழைத்தனர். அரேபியா என்று இதற்கு ஏன் பெயர் சூட்டினர் என்பது பற்றி இரு வேறு கருத்துக்கள் உள்ளன. அரப் எனும் அரபுப் பதத்தை அரேபியர் பேச்சாற்றல் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தினர்.